Saturday, June 14, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற சில பெண்கள் உண்டு அதில் ஓர் தமிழ் பெண்மணி.

Oredesam by Oredesam
August 18, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற சில பெண்கள் உண்டு.

ஜெர்மனியின் ஏஞ்சலா, நியூசிலாந்தின் ஜெசிந்தா என ஒரு சில அரசியல் பெண்களுக்கு தனி செல்வாக்கு உண்டு. அந்த வரிசையில் முதன் முதலில் ஒரு தமிழச்சி இடம் பிடித்திருக்கின்றார். உலகம் அவரை உற்று கவனித்து பல விஷயங்களில் பாராட்டி கொண்டிருக்கின்றது
அவர் திருச்சி தமிழச்சி, பின் வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதரபாத்திலுமாக‌ வசித்து பள்ளி நடத்தியபொழுது சுஷ்மாவின் பார்வையில்பட்டு தேசிய பணிக்கு வருகின்றார்.

READ ALSO

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

சுஷ்மாவின் அனுபவம் அவர் தனக்கு மிக சரியான வாரிசாக இருப்பார் என்பதை சொல்லிற்று, காலம் அதை உண்மை எனவும் காட்டிற்று, நாட்டுபற்றாளர் நம்பிக்கை எதுவும் பொய்த்ததில்லை
நிர்மலா சீத்தாராமன்.

உலகில் விரவிட்டு எண்ணும் மிக உயர்ந்த வரிசை பெண்களில் ஒருவர், இன்று இந்திய நிதியமைச்சர்
மோடி கடந்த ஆட்சியில் அவருக்கு ராணுவ அமைச்சர் பதவியினை கொடுத்திருந்தார். முதல் பணி அது மகா சிரமமான பணியும் அதுவே
உலகில் ஆயுத தொழில் கச்சா எண்ணெய், தங்கம் எல்லாம் விட சக்திவாய்ந்தது.

அள்ள அள்ள குறையா பணம் அது, கொட்டி கொடுக்க கம்பெனிகள் குனிந்து நிற்கும் துறை அது. அதில் பணத்துக்கு அப்பாற்பட்டு நிற்க தனி குணம் வேண்டும், நிர்மலா அதில் வென்றார்
ராணுவ அமைச்சர் ஒரு நாட்டில் ஆயுதம் கொள்வனவும் செய்யும்பொழுது ஏகபட்ட அரசியல் இம்சைகள் நடக்கும், சர்வதேச கம்பெனிகள் இந்தியாவில் இருக்கும் தங்கள் அல்லக்கை கட்சிகள் மூலமாக பல இடைஞ்சல் கொடுக்கும், அதையும் தாண்ட வேண்டும்.


நிர்மலா காலத்தில் அதை அவர் திறம்பட செய்தார், அவரின் அதி உச்ச சாதனை அப்பொழுது ரஷ்யாவிடம் எஸ் 400 சாதனத்துக்கு கையெழுத்திட சென்றது, அமெரிக்க மிரட்டல் இதர சிக்கல்களை சமாளித்து அந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக நிர்மலா கையொப்பமிட்டபொழுது உலகமே அவரை கூர்ந்து கவனித்தது.


சில பத்திரிகைகள் அன்றே இரண்டாம் இந்திரா காந்தி என எழுதின, தமிழக பத்திரிகைகளில் அது வராமல் பார்த்து கொள்ளபட்டு கூடுதலாக 2018ல் நிர்மலாவின் கார் தாக்கபட்டது.


தமிழகத்தில் ஒரு தேசியவாதி தாக்கபட்டால் அவர் நாட்டுக்கு நல்லது செய்கின்றார் என பொருள், இந்திரா அப்படித்தான் முன்பு தாக்கபட்டிருந்தார்
ரபேல் விமானத்தின் சர்ச்சைகளை தாண்டி, ஊழல் இல்லை என நிரூபித்து.

அவைகளை இந்தியா பெற முழு காரணமாக இருந்தார் நிர்மலா, அது மிகபெரும் சாதனை
அவர் காலத்தில் ராணுவம் முழு பலம் பெற்றது, ஒரு கட்டத்தில் புல்வாமா தாக்குதல் நடக்க.

அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலாவின் கடும் நடவடிக்கையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானை தாக்கின. எத்தனையோ முறை முன்பு அடிவாங்கிய இந்தியா நிர்மலா தலமையில் திருப்பி அடித்தபொழுது.

உலகமே கைதட்டியது நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறையில் செய்த சீர்திருத்தமே இப்பொழுது சீன நெருக்கடியில் தேசத்தை வலுவாக காத்து கொண்டிருக்கின்றது.


நிர்மலா பதவிக்கு வந்த நாளிலிருந்து இலங்கை கடற்படை தமிழக மீணவர்களை தொட்டுபார்ப்பதில்லை என்பது இன்னொரு விஷயம்.


முதல் ஆட்டத்தில் தேசத்தை பலமான ராணுவபாதைக்கு இழுத்து சென்ற நிர்மலா அடுத்த ஆட்டத்தில் பொருளாதாரதுறை அமைச்சரானார்
ஒரு தமிழ்பெண் தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகா முக்கிய அமைச்சராக பதவியேற்றது அதுதான் முதல்முறை
பொருளாதாரத்தில் பலத்த சீர்திருத்தம் கொண்டுவந்தார், பற்பல விஷயங்களில் அவர் செய்த மாறுதல் நல்ல பலனை கொடுத்திருந்தது.


ஆனால் எதிர்பாரா விதமாக உலகமே அதிரும் வண்ணம் கொரோனா தாக்கி அமெரிக்கா போன்ற நாடுகளே திணறியபொழுது இந்திய பொருளாதாரத்தினை தாங்கி நின்றார் நிர்மலா
அதுவரை நிர்மலா என்ன கிழித்தார் என்றவர்கள் அவசரகால நிதியாக கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடியினை அவர் அறிவித்தபொழுது வாய்மூடி நின்றார்கள்.


அந்த 20 லட்சம் கோடியில்தான் இன்று சென்னைக்கு ஒரே நாளில் பல லட்சம் பேர் படையெடுக்கும் அளவுக்கு பொருளாதாரத்தை உயிரோடு வைத்திருக்கின்றது.


சீனாவும் அமெரிக்காவும் ஜப்பானும் தென்கொரியாவுமே தடுமாறி நிற்கும்பொழுது இந்திய பொருளாதாரம் தாக்குபிடித்து நிற்கும் அதிசயம் நிர்மலாவால் நடந்து கொண்டிருக்கின்றது.
வங்கிகளை இணைத்தது, வாராகடன்களை மீட்க வழிவகை செய்தது என நிர்மலா செய்து கொண்டிருக்கும் சாதனைகள் ஏராளம்.


சிக்கலான நேரத்தில் ஆட்சிக்கு வந்த நிர்மலா, மிக அழகாக நாட்டை நடத்தி செல்கின்றார்.
சீனா நெருக்கடிக்கு உள்ளான இந்நேரம் சீனாவினை விட்டு வெளியேறும் நிறுவணங்களை இந்தியாவில் உள்ளே இழுக்க அனைத்து காரியங்களையும் செய்து கொண்டிருகின்றார்.

நிர்மலா நிச்சயம் அந்த அறிவான தைரியமான தமிழச்சியின் சேவை அளப்பறியது
கை நிறைய வளையலும், வகை வகையான உடையும், முகம் நிறைய ஒப்பனையுமாக பெண் எம்பிக்கள் (தமிழக எம்பிக்களும்) வரும் பாராளுமன்றத்தில் நூல் சேலையும் ஒப்பனையற்ற முகமுமாக, வயலுக்கு வேலைக்கு செல்லும் பாமர பெண்போல் வரும் அந்த நிர்மலாவின் எளிமை அளப்பறியது.


எல்லா கேள்விக்கும் எல்லா பதிலையும் நுனியில் வைத்திருக்கும் அந்த துல்லியம் அளப்பறியது புயல் காலம் போன்ற காலங்களில் தமிழ்நாட்டுக்கு அவர் ஓடிவந்து ஆற்றிய சேவைக்குத்தான்.

அவர் மேல் தாக்குதல் நடந்தது எனினும் அவர் பின்வாங்கினார் இல்லை, அந்த தைரியம் வாழ்த்துகுரியது
நிர்மலா பாதுகாப்பு அமைச்சராக இருந்தபொழுது சென்னை ஆவடியும், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும் பெரும் வேலை வாய்ப்புகளை பெற்றன, அதை மறுக்க முடியாது.


தேசிய அமைச்சராக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு தன்னால் முடிந்த சேவையினை செய்து கொண்டே இருந்தார்
ராணுவத்தை காத்த மாதரசி இப்பொழுது தாய் போல் இந்திய பொருளாதாரத்தையும் காத்து கொண்டிருக்கின்றார்
ஒரு விஷயம் அவரின் எதிரிகளும் ஒப்புகொள்ள கூடியது, அது அவரின் நேர்மை
தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகா சக்திவாய்ந்த பதவியின் அமைச்சராக இருந்தும் ஒரு துளி தங்கம் கூட அவர் அணிந்தவரில்லை.


வித விதமான கார்களில் வந்து வகை வகையான சொத்துக்களை அவரும் வளைத்ததில்லை அவர் கட்சிக்காரர்களும் வளைத்ததில்லை.


அவர் கண்ணசைத்தால் எத்தனையோ பிரமாண்ட கம்பெனிகளின் பங்குகள் அவர் காலடிக்கு வந்திருக்கும், திருப்பதி பெருமாளை விட கோடிகணக்கான தங்கம் அவர்முன் குவிந்திருக்கும்
ஆனால் அதையெல்லாம் தாண்டி நாட்டுபற்று எனும் ஒரே ஒரு நோக்கில் உழைத்து கொண்டிருக்கின்றார்.


அவரின் குடும்பத்தாரை எங்காவது காணமுடியுமா? அரசியல் அழிச்சாட்டியத்திலோ இல்லை வேறு விவகாரங்களிலோ அவர்கள் தென்பட்டார்களா?

இல்லை
நிர்மலா இந்தியாவினை காத்து நிற்கும் சக்தி, பராசக்தியின் வடிவம் இரண்டாம் இந்திரா என்றும் இந்தியாவின் ஏஞ்சலா மார்கோல் என்றும் , இந்தியாவின் கோல்டா மேயர் என்றும் உலகெல்லாம் புகழாரம் சூட்டபடும் அந்த காவல் தேவதைக்கு இன்று பிறந்த நாள் தமிழரின் தனிபெரும் பெருமையாக உயர்ந்து நிற்கும் அந்த தாரகைக்கு இன்று பிறந்த நாள் ஒரு விழாவில் தேசத்துக்காய் குடும்ப உறுப்பினர்களை இழந்த தாய்மார்களின் காலில் விழுந்து வணங்கினார் நிர்மலா..

அப்படி தேசம் இப்பொழுது அவர் காலில் விழுந்து வாழ்த்துக்களை சொல்கின்றது தமிழக பெண்கள் யாரை முன்னுதாரணமாக கொண்டு தேசியத்தில் கலந்து இந்நாட்டையும் மாநிலத்தையும் வளர்க்க உறுதி பூண வேண்டும் என்றால் அதில் நிர்மலாவுக்கும் இடம் உண்டு அவர் பிறந்தது சாதாரண குடும்பமே, அவரின் கல்வியும் தேசபற்றும் நேர்மையும் அவரை இந்த இடத்துக்கு கொண்டு சென்றது.

தமிழிசை அக்காவினை உயர்த்தியது போல் தேசிய கட்சியே இப்பெண்ணையும் உயர்த்தியது, திராவிட கட்சிகளில் குடும்ப தலைவன் தலைவனின் அடிப்பொடி தவிர எந்த வீட்டு பெண்களும் டெல்லிக்கு போக முடியாது போனாலும் உருப்பட முடியாது தமிழக பெண்கள் அரசியலில் சாதிக்க தேசிய கட்சியும் ஜனநாயக கட்சியுமான பாஜக ஒன்றே சரியான தேர்வு என்பது தமிழிசை, நிர்மலா விஷயத்தில் உறுதியாயிற்று
அந்த “ஸ்ரீரங்கத்து தேவதை” தாரணியில் தொடர்ந்து மின்னி பாரத பெருமையினை உயர்த்த ஸ்ரீரங்கத்து நாதன் அருள் புரியட்டும் பாரத கண்டத்தின் எல்லா தெய்வங்களும் , முன்னோர்களின் ஆத்மாவும், ரிஷிகளின் ஞானமுனிகளின் அரூப வடிவங்களும் அவர்களை வாழ்த்தட்டும்.


ஓளவையாரும் மங்கம்மாளும் கலந்து வந்த அந்த ஞானபிறப்பு இன்னும் பல பெருமைகளை தேசத்துக்கு பெற்று தந்து காத்து நிற்கட்டும் வருங்காலத்தின் இந்திய பிரதமர் ஒரு தமிழ்பெண் என உலகம் கூறும் கட்டியம் பலிக்கட்டும், நாடும் தமிழகமும் செழிக்கட்டும்

கட்டுரை:- வலதுசாரி எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

ShareTweetSendShare

Related Posts

Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025
Thug Life Roast
சினிமா

கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

June 13, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

9-ம் வகுப்பு மாணவியிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி ! வாயைமூடி மவுனம் காக்கும் ஸ்டாக்கிஸ்டுகள்…

9-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி ! வாயைமூடி மவுனம் காக்கும் ஸ்டாக்கிஸ்டுகள்…

November 17, 2021

கேரளாவில் முதல்முறையாக மசூதிகளில் தேசிய கொடி பறந்தது; 56 இஞ்ச் மோடியால் நடந்தது

February 12, 2020
குருடன் நொண்டிபயலுகள் என்று  தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

குருடன் நொண்டிபயலுகள் என்று தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

October 26, 2020
ஜெய் பீம் படத்தின் திட்டமிட்ட சதியை  வெளிகொண்டு வந்த மாரிதாஸ்……!

ஜெய் பீம் படத்தின் திட்டமிட்ட சதியை வெளிகொண்டு வந்த மாரிதாஸ்……!

November 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.
  • 3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’
  • அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash
  • மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x