ஈரானில் மீட்கப்பட்ட 277 பேருக்கு கொரோனா இல்லை !

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சிக்கி திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஈரானில் அதிகமாக காணப்படுகிறது. கிட்ட தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். 1900 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அந்த அந்நாட்டிலிருந்து 277 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனையடுத்து அண்டை நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய மோடி அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதனையடுத்து, ஈரானின் தெஹ்ரானில் இருந்து மஹான் ஏர் விமானம் மூலமாக டில்லி விமான நிலையத்திற்கு முதல்கட்டமாக 277 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 323 பேர் 28 ம் தேதி நாட்டிற்கு அழைத்து வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் யாருக்கும் கொரோனா இல்லை என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version