பிரித்திடுவோம் இல்லை அழித்திடுவோம்! தனி நாடு கேட்ட ஜின்னாவின் தந்திரம்!

பல ஆண்டுகளாவே முஸ்லீம்களுக்காக தனி நாடு கேட்டு கொண்டிருந்த ஜின்னா,முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து ஒரு நாட்டில் வாழவே முடியாது என்று ஆங்கிலேயர்களை நம்ப வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சாதாரணமாக சொன்னால் நம்பி விடுவார்களா, நடு மண்டையில் ஆணி அடித்ததை போல் சொல்ல வேண்டும். முஸ்லிம்களுக்கு தனி நாடு கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்று அனைவரும் கதறும் அளவுக்கு சொல்ல வேண்டும். அதற்காக வகுக்கபட்ட திட்டமே இந்த நேரடி நடவடிக்கை நாள்.

ஜின்னா, ஆகஸ்ட் 16 ஆம் நாள் ‘நேரடி நடவடிக்கை தினம்’ ஆக இருக்கும் என்று அறிவிக்கிறார். அதோடு காங்கிரஸ்ஸிற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். “நாங்கள் போர் செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் கொஞ்மும் தயங்காமல் போர் செய்வோம். இந்த நாடு ஒன்று பிரிக்கப்பட வேண்டும் இல்லை அழிக்கப்பட வேண்டும்” என்றார். “நான் பிரச்சனைகள் உருவாக்க போகிறேன். இனி சட்ட பூர்வமான வழிகளை கையாள போவது இல்லை” என்று வெளிபடையாக அறிவித்தார்.

1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் காலை ஜின்னா பேசியதை கேட்டு இன்று என்ன நடக்குமோ என்று அனைவரும் ஒரு வித பயத்தில் இருக்க, ஊரில் எந்த இடத்திலும் கலவரம் நடந்தாலும் தடுப்பதற்கு போலீஸ்காரர்கள் இல்லை. டிராபிக் போலீஸ் கூட ஊருக்குள் இல்லை. வெளி ஊர்களில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக கல்கத்தாவுக்குல் குவிகிறார்கள். தோராயமாக 200,000 முஸ்லிம்கள் கூடினார்கள். அன்று மதியம் ஆரம்பித்த அந்த கொடூரம் 4 நாட்கள் தொடர்ந்தது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்க பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறை ஆடப்பட்டு, வீடுகள் கடைகள் எரிக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், 15000 பேர் காயமடைந்தும், கற்பழிக்கப்பட்டும் இருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த சம்பவம் முடிந்த நான்காம் நாள் இறுதியில் கல்கத்தா நகரின் சாலைகள் எங்கும் பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள மனித உடல்கள் சிதரிக் கிடந்தன.

இந்த நேரடி நடவடிக்கை நாள் இப்படி கொடூரமாக போய் முடியும் என்று முஸ்லீம் லீகோ ஜின்னாவோ எதிர்பார்க்க வில்லை என்று ஒரு வாதம் உண்டு. ஜின்னா ஆகஸ்ட் 16ஆம் தேதியை தேர்ந்து எடுத்ததற்கே காரணம் உண்டு. அது ரம்ஜான் 18ஆம் நாள் அதுவே முகமது நபி battle of badr என்ற போரை ஆரம்பித்து அதன் விளைவாக மெக்காவை கைப்பற்றினர். அப்போது பிரிக்கபடாத வங்காளத்தின் முதல் அமைச்சராக இருந்த முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஹுசைன் ஷாஹீத் சுஹ்ராவாடி , ஜின்னாவை தொடர்ந்து அவரும் ஒரு கூட்டம் கூட்டி முஸ்லிம்கள் அனைவர்க்கும் badr போரை பற்றி நினைவு படுத்துகிறேன், இந்த நாளில் தான் அல்லா நமக்கு ஜிகாத் செய்ய கட்டளையிட்டார்.

உங்களை தடுக்க போலீஸ் வரமாட்டார்கள் (இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே சுஹ்ராவாடி கல்கத்தா காவல்துறையில் இருந்த பெரும்பாலான ஹிந்துகளை நீக்கி விட்டு அதற்கு பதில் முஸ்லிம்களை நியமித்தார்) என்றார், சொன்னபடி செய்தும் காட்டினார். கலவரம் நடந்து கொண்டு இருக்கையில் எந்த இடத்திலும் போலீஸ் கிடையாது. எந்த இடங்களில் ஹிந்துக்கள் எதிர் தாக்குதல் நடத்துகின்றார்களோ அங்கு மட்டும் போலீஸ் அனுப்பி வைக்கப் பட்டனர். சில நாட்கள் முன்னரே முஸ்லிம் லீக் பல லிட்டர் பெட்ரோல் கொள்முதல் செய்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்தனர். கலவரம் நடக்கும் பொழுதும், முதல் அமைச்சர் சுஹ்ராவாடி, கண்ட்ரோல் ரூமில் புகுந்து அப்போது இருந்த கமிஷ்னரை வேலை செய்ய விடாமல் தடுத்து இருக்கிறார். இவை அனைத்தும் இந்த சம்பவத்தை அடுத்து ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய பட்டுள்ளது. இதை எல்லாம் பார்க்கையில் இது நுட்பமாக திட்டம் இடப்பட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்றெ தெரிகிறது.

https://www.facebook.com/100042053344637/posts/250468533031590/?sfnsn=wiwspwa&extid=OSu3RfuT8sZRQDBS

Exit mobile version