29 நவம்பர், 2020-க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு.!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன.

இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி இடம் நாடாளுமன்றத்தில் உள்ளது.

இந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் வந்திருந்த அறிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை ஆணையம் ஆய்வு செய்தது. 

பெரும்பாலானவர்கள் கனமழை மற்றும் பெருந்தொற்றின் காரணமாக தங்கள் மாநிலங்களில் இடைத்தேர்தல்களைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை 29 நவம்பர், 2020-க்குள் நடத்தி முடிக்கவேண்டியதிருப்பதால், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையும், 65 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்தது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version