ஒரு பகுதியில் வழக்கமாக வசிக்கும்
(Usual Resident) மக்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட பதிவேடுதான்
NPR. (National Population Register).
ஒருவர் எங்கு, அதாவது எந்த ஊரில்,
மாவட்டத்தில், மாநிலத்தில் வசிக்கிறார் என்ற தகவல்களைக் கொண்ட ஒரு பட்டியல்.
“வழக்கமாக வசித்தல்” என்றால் என்ன?
ஒருவர் ஒரு பகுதியில் ஆறு மாதமாக
அல்லது அதற்கும் மேலாக வசித்து
வந்தார் என்றால் அது “வழக்கமாக
வசித்தல்” எனப்படுகிறது.
ஒருவர் அடுத்த ஆறு மாதங்களில் வசிக்க உத்தேசித்திருக்கும் இடமும் கூட இந்த வரையறைக்குள் வருகிறது.
இந்தத் தகவல்களை கோர அரசுக்கு
உரிமை இருக்கிறதா?
*குடியுரிமைச் சட்டம் 1955 (Citizenship Act 1955)
*குடிமக்களின் குடியுரிமைப் பதிவு
மற்றும் தேசிய அடையாள அட்டை
வழங்கல் விதிகள் 2003
இவற்றின் அடிப்படையில் இந்தத் தகவல்கள்
கோரப்படுகின்றன. இந்தச் சட்டங்களும்
விதிகளும் நெடுங்காலமாக நடைமுறையில்
இருப்பவை. பாஜக அரசு இயற்றியவை அல்ல.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டவை.
என்னென்ன தகவல்கள் கேட்கப்படும்?
1)பெயர்
2)குடும்பத் தலைவருடனான
உறவு
3)தந்தை பெயர்
4) தாயின் பெயர்
5) கணவர்/மனைவி பெயர்
6)பாலினம்
7)பிறந்த தேதி
8)திருமணமானவரா?
9)பிறந்த இடம்
10)எந்த நாட்டைச் சேர்ந்தவர்? (Nationally)
11) வழக்கமாக வசிக்கும் முகவரி
12)எவ்வளவு காலமாக வசிக்கிறீர்கள்?
13)நிரந்தர முகவரி
14) தொழில்
15) கல்வித் தகுதி.
இதற்கு ஒருவர் என்னென்ன
ஆவணங்களைத் தரவேண்டும்?
எதுவுமில்லை. “நான் அளித்திருக்கும் தகவல்கள் நான் அறிந்தவரையில் உண்மையானவை” என்று உறுதிமொழி கொடுத்தால் போதும்.
ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர்
அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்
எதுவும் கொடுக்க வேண்டாமா?
கொடுக்க வேண்டாம்.
கொடுக்காவிட்டால் அபராதம் விதிப்பார்கள்என்கிறார்களே?
அது தவறான, உண்மைக்கு மாறான
தகவல். எந்த ஆவணமும் கேட்கப்பட
மாட்டாது. அபராதம் விதிக்கப்படமாட்டாது
என்று மக்களவையில் அரசு எழுத்துபூர்வமாக உறுதியளித்திருக்கிறது.
அப்படி யானால் இது சென்சஸ்
(மக்கள் தொகை கணக்கெடுப்பு) போன்றதுதானா?
கிட்டத்தட்ட. ஆனால் சென்சஸில்
மேலும் பல தகவல்கள் திரட்டப்படும்.
வீடு இருக்கிறதா? வீட்டில் என்னென்ன
சாதனங்கள் இருக்கின்றன? வருமானம்,
மொழி, மதம், பட்டியலினத்தவரா?
பிறப்பு – இறப்பு விவரம், மாற்றுத்
திறனாளியா? என்பது போன்ற விவரங்கள் சென்சஸில் திரட்டப்படும்
By எழுத்தாளர் மாலன் (துக்ளக்)
……………..
இது தான் உண்மை
இப்போது பல தொழிற்சங்கங்கள் பலவகையான பொய் தகவல்களை பரப்புகின்றன.