விஜய் மல்லையா நீரவ் மோடி என்று பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று ஏமாற்றி விட்டு வெளி நாடுகளுக்கு தப்பிஓடியவர்களிடம் இருந்து பறிமுதல் செய் யப்பட்ட 9,371 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுத்துறை வங்கிக ளுக்கு அளித்து இருக்கிறது அமலாக்க துறை. இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது:
கடந்த வாரத்தில் மட்டும் விஜய் மல்லையாவிடமிருந்து வரவேண்டிய 8000 கோடிக்கும் மேலான தொகை பாரத ஸ்டேட் வாங்கி உட்பட 17 வங்கிகளுக்கு திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. மல்லையாவின் ‘யுனைடெட் பிரிவரிஸ்’ பங்குகளை அமலாக்க பிரிவு முடக்கியிருந்த நிலையில் அவைகளை விற்று இந்த தொகை வங்கிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
விஜய் மல்லையா செலுத்த வேண்டிய அசல் தொகையான 9000 கோடியில் பெரும்பாலான தொகை செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சொத்துக்களை விற்று முழு வட்டியும் வசூலிக்கப்படும் என தெரிகிறது. அதே போல் நீரவ் மோடி, முகுல் சோக்சி போன்றவர்கள் செலுத்த வேண்டிய கடன்களும் வட்டியோடு விரைவில் உறுதியாக வசூலிக்கப்படும்.
பல்வேறு சட்ட திருத்தங்கள் மற்றும்புதிய சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்ததின் மூலம், இனி சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கொண்டு பொது துறை வங்கிகளை மோசடி செய்வது முற்றிலுமாக தடுக்கப்படும். ஆனால், விஜய் மல்லையா வெளிநாடு தப்பி சென்ற போது கூக்குரலிட்டு அமர்க்களம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும், கடந்த வாரம் மட்டும் சுமார் 8000 கோடி வசூலிக்கப்பட்டு, வங்கிகளின் கணக்கில் சேர்க்கப்பட்டது குறித்து வாயடைத்து, மௌனம் காப்பது, தங்களால் இனி இந்த விவகாரத்தில், பாஜகவை குறைசொல்லி அரசியல் செய்யமுடியாது போய் விட்டதே என்ற அவர்களின் வருத்தத்தையே பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பணம் திரும்பப்பெற்றதுகுறித்து மகிழ்ச்சி தெரிவிக்காத நிலையில், மலிவு அரசியல் செய்யமுடியவில்லையே என்ற அவர்களின் ஆதங்கம் நல்லதல்ல.
நாராயணன் திருப்பதி.