புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர். கடந்த காலங்களில் 100 சதவிகித கல்வி வறுமை ஒழிப்பு என எண்ணற்ற சட்டங்களை தாங்கள்தானே இயற்றினீர்கள். அந்த சட்டங்கள் முறையாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தால் இந்நிலையே தோன்றியிருக்காது. தண்டவாளத்தை தொடர்ந்து சென்றால் செல்ல வேண்டிய ஊர் வந்துவிடுமென்ற அறிவைதானே வளர்த்திருக்கிறீர்கள்.இதுதான் 100 சதவிகித கல்வி அளித்த இலட்சணமா? 100 நாள் வேலை திட்டங்கள் முறையாக நடைமுறை படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் புலம்பெயர வேண்டிய அவல நிலையே தோன்றியிருக்காது. மக்களின் உயிரை காக்கவே ஊரடங்கு சட்டம். அதனை உணர்ந்திடாது எங்கள் சொந்த ஊருக்கு சென்றால் பிழைத்து கொள்வோம் என எந்த நம்பிக்கையில் செல்கிறார்கள். அவர்களது ஊரிலும் ஊரடங்கு சட்டம் இருக்கிறது என்பதை உணர செய்யாதது எவர் குற்றம். ஒரே தேசம் ஒரே ரேசன் என்ற திட்டம் அமலில் இருந்திருந்தால் அவர்களின் குடும்ப அட்டைக்கு இந்தியாவின் எந்த ஊரிலிருந்தாலும் அவர்களுக்கான உணவு பொருட்கள் கிடைத்திருக்கும். அதனை தடுத்தது யார்? அவர்களின் அறியாமையை மூலதனமாக்கி நீலி கண்ணீர் வடிக்கும் அரசியலை இனியாவது கைவிடுங்கள். அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதை அரசின் கடமை. எனவேதான் அரசு திரும்ப திரும்ப மன்றாடுகிறது இருக்குமிடத்திலேயே இருங்கள்.