ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஐனாக்ஸ் நிறுவன டைரக்டர் சித்தார்த் ஜெயின் கூறும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றிய சில விவரங்கள்…

தேவையான விவரங்களுடன் கூடிய பேட்டி!

1, திரவ நிலையில் உருவாக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் minus 183 degrees centigrade வெப்ப நிலையில் அதற்கான பிரத்தியேக கொள்கலனில் பாதுகாக்கப்படுகிறது. இந்தியாவில் இதை எடுத்துச் செல்ல 1,170 கிரையோஜெனிக் வாகனங்களே (cryogenic transportation tankers) உள்ளன. இதில் எங்களது ஐனாக்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் 320. இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணியில் 70 ஆலைகள் ஈடுபட்டுள்ளன.

2, கொரோனா தொற்றுக்கு முன், இந்தியாவின் தினசரி ஆக்ஸிஜன் தேவை சுமார் 700 டன். கொரோனாவின் முதல் அலையின் போது இத்தேவை 3,000 டன் என உயர்ந்தது. இப்போது இரண்டாவது அலையில் அது 8,000 டன்னை எட்டியுள்ளது.

3, நமக்கு போதுமான ஆக்ஸிஜன் உள்ளது இப்போது . தொற்று நோய் இவ்வளவு பரவும் என எவரும் கணிக்க முடியாது. கடந்த ஒரு மாதத்தில் தன் உற்பத்தியை 30% உயர்த்தியுள்ளது பாரதம். இது அசாத்தியமானது. உலகெங்கிலும் இம்மாதிரி சாதித்ததில்லை.

4, ஆக்ஸிஜனை ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்துச் செல்வது மத்திய அரசின் பணி அல்ல. மாநிலங்களின் வேலை அது.

5, டில்லி தன் வேலையை ஒழுங்காக செய்யவில்லையா என்ற கேள்விக்கு ஆம் என்று தைரியமாக போட்டு உடைத்திருக்கிறார் சித்தார்த். அவர்கள் மீது (நீதிமன்ற) அழுத்தம் அதிகரிக்கவே அவர்கள் ஆக்ஸிஜன் விவகாரங்களில் இறங்க துவங்கினர்.

6, “ஆக்ஸிஜன் தேவை இரண்டே வாரங்களில் 10 மடங்கு உயர்ந்தால், அந்த தேவையை பூர்த்தி செய்யும் வினியோக சங்கிலியை (supply chain) உடனே உயர்த்துவது சாத்தியமா? எடுத்துக்காட்டாக, வாகனங்கள் எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்தால், தேவையான பெட்ரோலுக்கு எங்கே போவது? நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பானால், அதற்கு தக்க மருத்துவர்கள் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்க முடியுமா? 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை எப்படி 800 நோயாளிகளை சமாளிக்க முடியும்? ஆனால் தேவை உருவாகிவிட்ட நிலையில், எங்களிடம் போதிய மருத்துவர்கள் இல்லை, படுக்கைகள் இல்லை என்று காரணம் காட்டி சிகிச்சை மறுக்க முடியுமா? முடியாது. சிகிச்சை அளித்தே தீரவேண்டும். அது நம் கடமை. அதே போலத்தான் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வினியோகிக்கும் நாங்களும். தேவைகள் பல மடங்கு (700 டன் —> 8,000 டன்) அதிகரித்தாலும், நாங்கள் அந்த தேவையை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” – சித்தார்த் ஜெயின்.

கூடுதல் தகவல்கள்…

ஆலைகளுக்கு (industry) தேவையான ஆக்ஸிஜன் அவற்றின் அருகிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. இப்படி இந்தியா முழுதும் எடுத்து செல்ல வேண்டிய தேவை இப்போது தான் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனில் 15% மருத்துவத்துக்கும் 85% industryக்கும் சென்று வந்தது. இப்போது நிலை மாறிவிட்டது.

குஜராத், மஹாராஷ்டிராவில் ஏற்கனவே ஆலைகள் இருப்பதால் ஆக்ஸிஜன் உற்பத்தி / வினியோகத்துக்கு பிரச்சினை இல்லை. ஆலைகள் இல்லாத உத்தரபிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் தான் பிரச்சினை.

*** இவ்வளவு வேலையையும் அசுர வேகத்தில் செய்திருக்கிறது மோதி அரசு. ஆக்ஸிஜனை டிரெயின், விமானம் என அதை கொண்டு சேர்க்கிறது. நன்றி கெட்ட ஊப்பீஸ் குறை சொல்லி திரிகிறார்கள். அவரவர் ஆக்ஸிஜனுக்கு திண்டாடும் போது தெரியும் வலி ***

நன்றி :- சமூக செயல்பாட்டாளர் செல்வநாயகம்.

Exit mobile version