காஷ்மீரில் 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய 4 பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் பயங்கரவாதிகள் பற்றிய முக்கிய தகவலை பெண் ஒருவர் வழங்கி உள்ளார். அவரது தகவலை தொடர்ந்து கதுவாவில் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுளார்கள். இதனால் தீவிரவாதிகளை இந்திய ணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் கைது செய்தது பாதுகாப்புப் படை.
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மோடி ஆட்சியிலன் கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். அங்கு பெரிய அளவில் போராட்டம், வன்முறை இல்லாமல் இருந்தது. சட்டசபை தேர்தல் என்பது அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. இதுதவிர நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை என்பது அதிகரித்தது.இதற்கிடையே தான் கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு என்பது நடத்தப்பட்டது. அதாவது பஹல்காம் அருகே புல்மேடு பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டபோது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் மொத்தம் 26 பேர் இறந்தனர். இதில் இந்துக்களை மட்டுமே குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் பஹல்காம் தாக்குதல் குறித்து நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பஹல்காம்தாக்குதல் பற்றி விவாதிக்கப்ப ட்டு இருக்கிறது.பல கட்சி தலைவர்கள் ஏன் பஹ ல்காமில் உள்ள பைசரன் பள்ள தாக்கு பகுதியில் உள்ள பூங்கா வில் பாதுகாப்பு இல்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இதற்கு மத்திய அரசு தரப்பில் அளித்துள்ள பதில் பைசரன் பகுதியை ஜூன் மாதம் வரை திறக்க வேண்டாம் என்று பாதுகாப்பு படைகள் கூறி இருந்து இருக்கிறது. அதாவது அமர்நாத் யாத்திரையின் பொழுது தான் திறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
ஆனால் லோக்கல் நிர்வாகம் எந்தவித அறிவிப்பும் திறந்துள்ளது. திறந்த இரு நாட்களில் தாக்குதல் நடைபெற்றுருக்கிறது. மேலும் இந்த தாக்குதல் ஒரு உடனடியாக தீர்மானிக்கப்பட்டு இருக்க முடியாது. எனவே அங்கு இருக்கும் சில தேசவிரோதிகளுடன் இணைந்து நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் என செய்தி வெளியாகி உள்ளது.
.இந்நிலையில் தான் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் குறித்த முக்கிய தகவலை பெண் ஒருவர் வழங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வரும் சூழலில் இந்த தகவல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் பெண் அளித்த தகவலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சிறப்பு படை பிரிவை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர். அவர்களுடன் ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாரும் இணைந்துள்ளனர்.
கதுவாவில் தான் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை சிறை பிடிக்க முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் புல்வாமா, பாராமுல்லா உள்ளிட்ட இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த இடமான பஹல்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ராணுவத்தினர் வாகனம் மற்றும் ஹெலிகாப்டரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டன. மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான பிஜ்பிஹாரா பகுதியை சேர்ந்த அதில் உசேன் தோக்கருக்கு சொந்தமான வீடு என்பது ஐஇடி எனும் சக்தி குறைந்த குண்டுகள் வைத்து இடிக்கப்பட்டது. அதேபோல் ஆசிப் செய்க் என்பவரின் வீடும் புல்டோர் கொண்டு இடிக்கப்பட்டது. இதில் அதில் உசேன் தோக்கர் என்பவர் இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துள்ளதாக சந்தேகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.