ஐ.நா பொதுகுழு கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஐ.நாவுக்கான இந்திய செயலாளர் சினேகா துபே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கேட்ட கேள்விகளும், தொடுத்த வினாக்களும் உலக அளவில் பாகிஸ்தானை தலைகுனிய வைத்துள்ளன.அந்த இளம்பெண் இந்தியாவின் 70 ஆண்டுகால குரலாக ஒலித்தார்.சினேகா எனும் சுத்தமான இந்திய பெண் கோவா பிறப்பு, 2021ல் வெளியுறவுதுறையில் தேர்ச்சி பெற்றார், அவரின் தேசாபிமான அணுகுமுறையால் மிகபெரிய பதவியினை கொடுத்தார் மோடி.
யார் இந்த சினேகா துபே?
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரை பூர்விகமாகக் கொண்டவர் சினேகா தூபே. இவரது தந்தை ஒரு பொறியியலாளர். தாயார் ஆசிரியர். கோவாவில் பள்ளிப்படிப்பை முடித்த சினேகா, புணேவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பும் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதே விவகாரங்கள் துறையில் ஆய்வுப்பட்டமும் பெற்றார்.
சினேகாவுக்கு 12 வயதாக இருந்தபோது, இந்திய வெளியுறவு சேவையில் சேர விரும்பினார்.மத்திய பொதுப்பணித்துறை தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே இவர் 2011ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார்.
2012இல் இவருக்கு இந்திய வெளியுறவுப் பணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்த இவர் இளநிலைச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஸ்பெயினின் மேட்ரிட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாவது செயலாளர் ஆக பணியாற்றினார். பிறகு இரண்டாம் நிலை செயலாளராக இருந்து முதலாம் நிலை செயலாளராக பதவி உயர்வு பெற்று ஐ.நாவில் உள்ள இந்திய நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
வழக்கமாக சர்வதேச மன்றங்களில் தாயக நாடுகள் மீது பிற நாடுகள் குற்றம்சாட்டும்போது, அதற்கு பதில் தரும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கப்படும். அந்த வகையில் ஐ.நா. அரங்கில் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் தங்களுடைய பதிலை பதிவு செய்வர்.
அந்த இளம்பெண் சிங்கம் ஐநா அவையில் பாகிஸ்தனை புரட்டி எடுத்து கொண்டிருக்கின்றது ,பாகிஸ்தானின் பொய்முகங்களை கிழித்து கொண்டிருக்கின்றது.இதுவே காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் என்னாயிருக்கும் தெரியுமா?அண்டை நாடுகளுடன் நல்லுறவு, மத சகிப்புதன்மை என இந்த திறமையான அதிகாரிக்கு வாய்ப்பு மறுக்கபட்டு இவரை ஆப்ரிக்காவின் கானாவுக்கான அதிகாரியாக நியமித்திருப்பார்கள், அம்மணி அந்த வனாந்திரத்தில் இருந்து சில காட்டெருமைகளை கண்டு கொண்டிருக்கும்.
அவர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் முதன்மை செயலாளராக உள்ளார். சினேகாவின் ஐநா உரை காணொலி வெளியான பிறகு, ட்விட்டர் பயனர்கள் அவருக்கு பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.
மோடி என்ன செய்கின்றார் என்றால் நாட்டுபற்றும் தேசிய உணர்வும் கொண்டோரை சரியான இடத்தில் நிறுத்துகின்றார்.இந்த சினேகாவும் டெல்லி நேரு பல்கலைகழகத்தில்தான் படித்திருக்கின்றார், இதோ மின்னுகின்றார் இதே பல்கலைகழகத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி, சமூகபோர் என கண்ணையாகுமார் போல பேசிதிரிந்த கோஷ்டிகளும் படித்தன என்பதும், அந்த களைகளுக்கும் தேசம் நிதிவழங்கி படிக்க வைத்தது என்பதும் வேதனை சினேகா போன்ற துடிப்பான இளம் அதிகாரிகளின் சேவை நாட்டுக்கு அவசியம், அவரின் துணிச்சலான பேச்சினை தேசமும் உலகமும் வரவேற்கின்றது, நல்ல அதிகாரிக்கு வாய்பளித்த மோடிக்கு வாழ்த்துக்கள்.