Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

டீசலுக்கே திண்டாடும் பாகிஸ்தான்… இந்தியா இறங்கி அடிக்க ஆரம்பித்தால் பாகிஸ்தானின் கதி என்ன? ..அந்தோ பரிதாபத்தில் பாக்!

Oredesam by Oredesam
May 1, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
pak

pak

FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் 26 அப்பாவிகள் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்திய அரசு பதிலடி தாக்குதல் ஏதும் நடத்தவில்லையே’ என்ற அவசரம் பொதுமக்கள் மத்தியில் தென்படுகிறது. கோபம் வந்த வேகத்தில் பதிலடி தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சர்வதேச அரங்கில் நம் நாட்டின் இடத்தையும் நம் இலக்குகளையும் கருத்தில் கொண்டே அதை செய்ய முடியும்.

இதற்கிடையில் டெல்லியில் டாப் கியரில் ஒரு உயர்நிலைக் கூட்டம் நடந்தது! பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி அனில் சவுஹான் மற்றும் ஆயுதப் படைகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பு! நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசல்! இதில் பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை… எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்!

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

“பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்வது? எங்கே தாக்குவது? எப்போது தாக்குவது? இந்த நடவடிக்கைகளின் முறை, இலக்கு, நேரம் – இதை ராணுவம் autonomy உடன், அதாவது சுதந்திரமாக, துணிச்சலாக முடிவெடுக்கட்டும்!” என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர்! இது, பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இந்தியா எந்த அளவு உறுதியாக இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது!

இதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், NSG, BSF, CRPF, SSB உள்ளிட்ட டாப் பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது, உள்நாட்டுப் பாதுகாப்பிலும் இந்தியா இரும்புக்கரம் காட்டுவதை உணர்த்துகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச மீடியாக்களே (நியூயார்க் டைம்ஸ் உட்பட) ‘இந்தியா பதிலடி கொடுக்குமா? அது போர் ஆகிவிடுமா?’ என விவாதித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சு… அதிர வைப்பதாக இருந்தது.

ராணுவ பலம்… இந்தியா எங்கேயோ! பாகிஸ்தான் திண்டாட்டம்!
சரி, அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் என்ன ஆகும்? இங்கேதான் இந்தியாவின் உண்மையான பவர் வெளிப்படுகிறது! ராணுவ வலிமையில் பாகிஸ்தானை ஒப்பிடுகையில், இந்தியா எங்கேயோ இருக்கிறது! உலக ஃபயர்பவர் குறியீடு (Global Firepower Index) என்ன சொல்கிறது தெரியுமா? இந்தியா ராணுவ வலிமையில் உலகிலேயே 4-வது இடம்! பாகிஸ்தான் 12-வது இடம்! இந்தியாவின் பலம் பாகிஸ்தானை விட 3 மடங்கு அதிகம்!

ஃபேல், சுகோய் போன்ற உலகத்தரம் வாய்ந்த போர் விமானங்கள், மேம்பட்ட இரவு நேரப் போருக்கு கச்சிதமான உபகரணங்கள், INS விக்ராமாதித்யா, INS விக்ராந்த் போன்ற ராட்சச விமானந்தாங்கிக் கப்பல்கள் கொண்ட வலிமையான கடற்படை என இந்தியாவின் விரிவான ஆயுதக் களஞ்சியம்… எதிரிகளை மிரள வைக்கும்! டிஜிட்டல் போர்லயும் சரி, துல்லியமான நீண்ட தூர அணு ஆயுத தாக்குதல் திறனிலும் சரி… பாகிஸ்தானுடன் ஒப்பிட்டால் இந்தியாவுக்கு நிகர் இந்தியா மட்டுமே!

பொருளாதார பலம்… பாகிஸ்தான் பரிதாப நிலை!

ராணுவ பலம் ஒருபக்கம் என்றால், பொருளாதார பலம் இன்னொரு பக்கம்! இந்த விஷயத்திலும் பாகிஸ்தான் பரிதாப நிலைதான்! தனிநபர் வருமானத்தில் இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னே! இந்தியாவின் நிதி நிலைமை அசைக்க முடியாத பாறை போல உறுதியானது! கணிசமான பாதுகாப்பு பட்ஜெட்டுடன், வெளிநாட்டு இருப்பு, தேவைப்பட்டால் கடன் வாங்கும் திறன் என எல்லாமே போர்க்கால செலவுகளை சமாளிக்க இந்தியாவுக்கு கைகொடுக்கும்! பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை போருக்காக ஒதுக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு!

ஆனால், பாகிஸ்தான்? அங்கே பெட்ரோல், டீசல் இல்லாம ராணுவமே பயிற்சி செய்ய முடியாமல் திண்டாடும் நிலை! இதைவிட பெரிய வேடிக்கை வேறென்ன இருக்க முடியும்? மோசமான பொருளாதாரம், லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாடும் பாகிஸ்தானால் ஒரு நீண்டகால போர்னா எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும்னு யோசிச்சுப் பாருங்க!

அடிப்பது எப்போது? எப்படி? இந்தியா தீர்மானிக்கும்!

பஹல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு போர் வருமா என்ற பேச்சு எழுந்தாலும், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராம்ஷ்வர் ராய் போன்ற நிபுணர்கள், ‘இப்போதைய சூழல் உடனடி போர் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை’ என்று கூறினாலும், ‘தண்டனை நடவடிக்கைக்கான வாய்ப்பை ஒதுக்க முடியாது’ என்கிறார்! அதாவது, அடிப்பது எப்போது, எப்படி என்பதை இந்தியா தீர்மானிக்கும்! அணுசக்தி முதல் டெக்னாலஜி வரை எல்லா களத்திலும் இந்தியாவுக்குத்தான் மேன்மை! பெரிய ஆயுத பலம், நவீன தொழில்நுட்பம், உறுதியான பொருளாதாரம்… இதுதான் இந்தியாவின் பலம்!

போர் செலவு, ஆயுதக் கையிருப்பு… இந்தியா தயார்!

போர்னா சும்மாவா? செலவு ஒருபக்கம்… வெடிமருந்து கையிருப்பு இன்னொரு பக்கம்! கார்கில் போர்லயே பாகிஸ்தானை விட இந்தியா பல மடங்கு அதிகம் செலவு செய்தது வரலாறு! இந்தியாவின் பொருளாதார வலிமை, அந்நியச் செலாவணி கையிருப்பு, தேவைப்பட்டால் கடன் வாங்கும் திறன் என எல்லாமே போர்க்கால செலவுகளை சமாளிக்க கைகொடுக்கும்! வெடிமருந்து கையிருப்பிலும் இந்தியா படு கெட்டியாக இருக்கிறது! நீண்டகால போர் நடந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு இருக்குதாம்! அதிரடி ஆயுத உற்பத்தியிலும் இந்தியா சுயசார்பை நோக்கி வேகமாக நகர்வது இன்னும் பலம்! ஆயுதங்களை ஏற்றுமதியும் செய்கிறோம்!

ஆனால் பாகிஸ்தான்? பொருளாதாரக் கட்டுப்பாடு, லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாட்டம்! ஒரு நீண்டகால போர்னா இவங்களால நிக்கவே முடியாது!மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்றால்… இந்தியா இப்போது பழைய இந்தியா இல்லை! பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! யார் வம்பு செய்தாலும், எங்கு பிரச்சனை செய்தாலும், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்! ராணுவ பலம், பொருளாதார வலிமை, தொழில்நுட்ப மேன்மை என எல்லா வகையிலும் இந்தியா பலம் வாய்ந்த நாடாக நிற்கிறது! பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பரிதாப நிலையை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது!

இனி இந்தியாவில் வம்பு செய்தால், பதிலடி பயங்கரமாக இருக்கும் என்பதுதான் டெல்லியில் இருந்து வரும் செய்தி!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கள்ள நோட்டுகளை அச்சடித்து திருவிழாக்களில் புழக்கத்தில் விட்ட 3 சிறுவர் கைது.

கள்ள நோட்டுகளை அச்சடித்து திருவிழாக்களில் புழக்கத்தில் விட்ட 3 சிறுவர் கைது.

June 5, 2023

எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா.. ஸ்டாலின்

February 4, 2021
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டைவிட சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

June 10, 2021
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை –  வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை – வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

June 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x