பாகிஸ்தானியர்கள் கொண்டாடும் மோடி! எல்லா புகழும் மோடிக்கே!

modi national flag

modi national flag

பிரதமர் மோடி அவர்களை உலகமே பாராட்டி வருகிறது.குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மோடியை புகழந்து தள்ளிவருகிறது. இசுலாமிய நாடான ஈரானில் உள்ள சபகர் துறைமுகத்தை பராமரிக்க இந்தியாவிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு டாலரை ஓரம் கட்டி ரூபாயில் வாங்கி வருகிறது. இதெற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி அவர்களே.

கொரோனா தாண்டவத்திற்கு பிறகு உலகமே பொருளாதார சிக்கலில் உள்ளது. நமது அண்டை நாடுகளுக்கான பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலைகள் லிட்டர் 200 ருபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது, இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அத்தியாவசப் பொருட்‌களான அரிசி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் சர்க்கரை கிலோ 250 ருபாய்க்கும் பருப்பு வகைகள் கிலோ 300 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டதை கண் கூடாக பார்த்தோம் ஆனால் இந்தியாவில் பெரிய அளவில் விலை மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால் தான் உலக நாடுகள் இந்தியவை பார்த்து வியந்துள்ளது. எப்படி கொரோனவை சமாளித்தார்கள் அப்போது 80 கோடி மக்களுக்கு எப்படி இலவச உணவு தானியம் வழங்கப்பட்டது தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டது விண்வெளி துறையில் சாதிக்கிறார்கள் என அனைவரும் வியப்புடன் இந்தியாவை பார்த்து வருகிறார்கள்

இந்தநிலையில் இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, பாகிஸ்தான் கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது” என அந்நாட்டு பார்லிமென்டில் எம்.பி., பேசியது வைரல் ஆகி உள்ளது.பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முட்டாஹிடா குவாமி கட்சி எம்.பி சையத் முஸ்தபா கமால் பேசியதாவது:: இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவல நிலை நிலவுகிறது. டிவி திரையில் நிலவில் தரையிறங்கி இந்தியா சாதனை படைத்தது என்ற செய்தி வந்தது. அடுத்த 2 நிமிடங்களில், கராச்சியில் திறந்த வெளி சாக்கடையில் விழுந்து குழந்தை இறந்தது என்ற செய்தியும் வந்தது.

பாகிஸ்தானின் வருவாய் இயந்திரமாக கராச்சி உள்ளது. பாகிஸ்தான் உருவானதில் இருந்து கராச்சியில் தான் இரண்டு துறைமுகங்கள் செயல்படுகின்றன. பாகிஸ்தான், மத்திய ஆசியா முதல் ஆப்கன் வரை நுழைவு வாயிலாகவும் இருக்கிறோம். ஆனால், 15 ஆண்டுகளாக தூய்மையான குடிநீரை கராச்சி நகருக்கு வழங்க முடியவில்லை.

தண்ணீர் வந்தாலும், டேங்கர் மாபியா அதனை பதுக்கி வைத்து மக்களிடம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்து கொண்டு இருந்தது.

என பேசியது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சஜித் தரார். மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார். இந்தியாவின் ஜனநாயகத்தில் இருந்து உலக மக்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்.

பாகிஸ்தானில் ஏற்றுமதியை அதிகரிப்பது. பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வருவது, மற்றும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது உள்ளிட்ட அடிமட்ட பிரச்சினைகளை தீர்க்க எந்த முயற்சியும் இல்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து விலகி அடுத்த கட்டத்திற்கு பாகிஸ்தானை கொண்டு செல்ல மோடி போன்ற தலைமை எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.” என கூறி மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்

Exit mobile version