பழனியில் பாலியல் புகாரைக் காவல்துறை வாங்க மறுத்திருப்பது தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்!
ராமதாஸ் காட்டம்!
பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 19ஆம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வந்திருந் போது,அந்த பெண்ணை கடத்தி அருகில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று சிலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பழனி அடிவாரத்தில் உள்ள காவல் துறையிடம் புகார் அளிக்க முயன்றபோது அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர்.இதனால், வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பி விட்டேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பெண் பழனி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.ஆனால்,அவர் கொடுத்த புகாரை வாங்க தமிழக காவல்துறையினர் வாங்க மறுத்துள்ளனர். ,இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கேரள டிஜிபி அனில்குமார் கடிதம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசினை கண்டித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! கேரள பெண்ணின் கணவனை அடித்துத் துரத்தி விட்டு, அங்குள்ள விடுதிக்கு கடத்திச் சென்று இந்தக் கொடுமையை அந்த கும்பல் செய்திருக்கிறது.
அதனால் பாதிக்கப்பட்ட பெண் கேரளத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்! அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான்.
இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார் தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! தனது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,