பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி! ட்விட்டரில் பிளாக் செய்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

கொரோனா மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு தமிழக அமைச்சர் பழனிவேல் ராஜன் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதற்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வும் பாஜக மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை இழிவு செய்வது போன்று அமைந்துள்ளது, மேலும் நமது தமிழக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்தும். வாய்மொழியாக கோவா போன்ற மாநிலத்தை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர் தமிழக முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யவில்லை, இதற்கு பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இதற்கு டிவீட்டரில் பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், மாற்றத்திற்காக வேலை செய்யுங்கள், உங்களுடைய பொய்களுக்கு என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள், நீங்க ஒரு பிறவி பொய்யர் மற்றும் குறைந்த அறிவு திறன் கொண்டவர் என கேள்வி எழுப்பிய ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு கடுமையாக பதிலளித்தவர், இது போன்ற தந்திரமான கேள்விகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என பதிலளித்தவர் கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசனை டிவீட்டரில் பிளாக் செய்துள்ளார்.

தன்னை பிளாக் செய்ததை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் தமிழக நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் விமர்சனங்களைத் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதோடு, அவர் அற்ப செயல்களில் இறங்கியுள்ளது வருத்தமளிக்கிறது.

நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் சொல்வதாலோ, அல்லது நான் ஆகச் சிறந்த அறிவாளி இல்லை என்று நீங்கள் சொல்வதாலோ ஒருபோதும் உண்மைகளை மூடி மறைத்துவிட முடியாது.

திரு.ஹெச் ராஜா அவர்களைப் பற்றியும், சத்குரு அவர்களைப் பற்றியும் நீங்கள் கீழ்த்தரமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வசைபாடிதன் மூலம் நீங்கள் எவ்வளவு இழிவானவர் என்பதை ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டீர்கள். என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன்.

Exit mobile version