“ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக அறிவித்து, தனது தேச விரோதத்தை தாறுமாறாக வெளிப்படுத்தி உள்ளார், திமுக முதல்வர் ஸ்டாலின்.

ஈ.வே.ராமசாமி நாயக்கரை தேச துரோகி என்றும், அவரை ஏன் இன்னமும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்று கொந்தளித்தவர் ஹெச்.ராஜா அல்ல, சாட்சாத் முத்துவேல் கருணாநிதிதான். அதவாது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தகப்பனார்தான், இப்படி ருத்ர தாண்டவம் ஆடினார்.

11-03-1966 அன்று சட்டசபையில், கருணாநிதி பேசியதை அப்படியே நினைவுபடுத்துகிறோம்.

கருணாநிதி பேசியதாவது:-

எழுதினால், பேசினால் முரசொலி, மாலை மணி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன். அதை படித்த பிறகு அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது.

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.

இத்தனைக்கும் நான் ஒன்பது மாற்று கம்யூனிச காரனுமல்ல” – இத்தனையும் நான் எழுதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்லது பாலைவன கோட்டைக்கு அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அத்தனை பேர்களையும் கண்காணா தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.” என்று எழுதியவர் – எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிறது.

பெரியார் ஈவேரா அவர்கள் 5.2 .1966 “விடுதலை” பத்திரிக்கையில் இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறார்.

பாதுகாப்பு சட்டம் எங்கே போயிற்று? பாதுகாப்பு சட்டம் பெரியார் என்ற பெயரை கண்டவுடனே மழுங்கி விட்டதா?

அவர் காலடியில் மண்டியிட்டு விட்டதா? தேர்தலில் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை. கேவலம் ஒரு சில வோட்டுக்களுக்காக இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் போய்விட்டார்களே என்று கவலையாக உள்ளது.
இவ்வாறு முத்துவேல் கருணாநிதி, 11-03-1966 அன்று சட்டசபையில் கொந்தளித்து பேசினார்.

இதை வெளியிட்டதும் ஏதோ இந்து முன்னணியோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ இல்லை.

“கலைஞரின் சட்டமன்ற உரைகள்” என்ற புத்தகத்தில்தான் இது இடம்பெற்றுளள்ளாது. அதில் 3-ஆம் பாகத்தில், 57-வது பக்கத்தில் மேற்குறிப்பிடப்பட்டவை இடம் பெற்றுள்ளன.

இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்னவோ? ஒருவேளை படித்து இருந்தால், “ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடபடும்” என்று அறிவிக்காமல் இருந்திருபாரோ என்னவோ?

Exit mobile version