பத்திரிகையாளரும், தகவல் ஆணையருமான உதய் மகுர்கர் எழுதியுள்ள வீர் சவார்கர் வாழ்க்கை புத்தகத்தின் வெளியீட்டு விழா, நேற்று டெல்லியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்பாதுகாப்பு துறை அமைச்சர்கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில் :
வீர் சவார்கர் குறித்து பொய்த் தகவல்கள் காலம் காலமாக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், விடுதலை செய்யுமாறு கருணை மனு கொடுத்ததாக மீண்டும் மீண்டும் பொய்யை கூறி வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யுமாறு கேட்பது இயற்கைதான்.ஆனால், வீர் சவார்கர், தனக்காக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மஹாத்மா காந்தி கூறியதால் தான், கருணை மனுவை அவர் கொடுத்தார்.
அஹிம்சை வழியில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் சவார்கர் விடுதலை செய்யப்பட வேண்டும் என, மஹாத்மா காந்தி விரும்பினார். ‘மஹாத்மா காந்தி வலியுறுத்தியதால் தான், சுதந்திர போராட்ட வீரர் வினாயக் தாமோதர் சவார்கர், பிரிட்டிஷ் அரசிடம் கருணை மனு கொடுத்தார். ‘ஆனால், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கொள்கை உள்ளவர்கள், சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்களை பரப்புகின்றனர். பொதுவுடைமை எதிர்ப்பாளராக அவரை பொய்யாக சித்தரித்துள்ளனர்.
கொள்கையில் வித்தி யாசம் இருக்கலாம். ஆனால், சுதந்திரத்திற்காக போராடிய மிகச் சிறந்த தலைவரை சிறுமைபடுத்தக் கூடாது. மிகச் சிறந்த தேசியவாதியான சவார்கர், நாட்டின் முதல் ராணுவ யுக்தி நிபுணராகவும் இருந்தார்.அவருக்கு முக்கியத்துவம் தந்திருந்தால், நாடு இரண்டாக பிரிந்திருக்காது.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நிகழ்ச்சியில் உரையாற்றினார் அவர் பேசியதாவது: பாரதம் சுதந்திரம் அடைந்த பின், வீர் சவார்கர், சுவாமி விவேகானந்தர் உட்பட பரதத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை இழிவுபடுத்தும் திட்டமிட்ட சதி பிரசாரம் நடந்தது.
தற்போதும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மற்றும் ஹிந்து மகாசபையை உருவாக்கிய சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்யான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நாடு ஒற்றுமையுடன் இருப்பதை விரும்பாத வர்களே, சவார்கரை எதிர்க்கின்றனர்.
தேசியவாதத்தை ஆதரித்த அனைவருக்கும் சம உரிமையை வலியுறுத்தியவர் சவார்கர்.நம்மிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், ஒற்றுமையுடன் இருப்போம்; இதுதான் இந்தியா. உதாரணத்துக்கு நாடளுமன்றத்தில் கட்சியினர் கடுமையாக மோதிக் கொள்வர். ஆனால், வெளியே சேர்ந்து டீ குடிப்பர். ஹிந்துத்துவா, தேசியவாதம் குறித்து சவார்கர் போல் அனைவரும் சத்தமாக பேசியிருந்தால், இந்த நாடு பிளவுபட்டிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.