பெட்ரோல் விலையும் பத்திரிக்கை தர்மமும்! இணையத்தில் வைரலான ஊடக தர்மம்!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது அனைத்து மக்களையும் பாதித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரியும் காரணம் ஆகும். கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. தொழில்கள் முடங்கியுள்ளது. மத்திய அரசு 130 கோடி மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குகிறது. மதும் நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் ரேஷன் கடைகளில் வழங்குகிறது. அனைத்து வகையிலும் 6 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதர ஊக்க தொகைக்கு ஒதுக்கியுள்ளது.

இதில் எல்லை பிரச்னையையும் திறம்பட கையாண்டு வருகிறது. மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்த இக்கட்டான சூழல் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தால் இந்தியாவின் பொருளாதாரம் என்னவாகும். மேலும் இதற்கு பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர மத்திய அரசு தயாரக உள்ளது. பல மாநில அரசுகள் ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர கூடாது எனபோர்க்கொடி தூக்கியுள்ளார்கள். ஜிஎஸ்டி க்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வந்தால் விலை 28% குறையும், இதையெல்லாம் ஊடங்கள் மறைத்து மத்திய அரசு தான் காரணம் என கூறி வருவது வேடிக்கையாக உள்ளது

இந்த நிலையில் தற்போது இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது . மே 2 க்கு முன்னால் தமிழகத்தில் எல்லோருமே பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்கு மத்திய – மாநில அரசை கண்டித்துதான் போராடினார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தை உதாரணமாக காட்டி,அங்கு போல தமிழகத்திலும் மாநில அரசு வரியை குறைத்து விலை குறைத்தால் என்ன என்றெல்லாம் கேட்டார்.

ஆனால் தற்போது பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தை கண்டிக்கும் எல்லா போராட்டத்திலும் மாநில அரசு கழண்டுவிட்டது.மத்திய அரசை மட்டும் கண்டிக்கிறார்கள்..இங்கே ஒரு நியாயமான ஊடகமிருந்தால் அது என்ன கேள்வி எழுப்ப வேண்டும்? இது தான் ஊடக தர்மம் என ஹிந்து தமிழ் பேப்பரின் செய்தி வைரலாகி வருகிறது.

Exit mobile version