பிரசாந்த் கிஷோர் இந்த தேர்தலோடு காலியா.

இந்த தடவை பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்காள தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசிற்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து கொண்டு இருக்கிறார்.

மம்தாவுக்கு தான் முதலில் ஆலோசனை வழங்க ஒப்பந்தம் ஆனார். அடுத்து திமுக இரண்டு மாநிலங்களிலும் ஒரே நேரத்தி ல் தேர்தல் நடைபெற இருப்பதால் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் வியூகங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு பெரிதாக பலன் அளிக்க முடிய வில்லை.

திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் ஆன பிறகு இரண்டு கட்சிகளிலும் தேர்தல் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது

இரண்டு கட்சிகளும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ இருப்பது உறுதி..இரண்டு மாநிலங்களிலும் பிரசாந்த்
கிஷோரின் ஐபேக் டீமை பேக் செய்து அனுப்ப பிஜேபியின் அரசியல் டீம் தயாராக இருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் உள்ள 76,000 பூத்களில் ஒவ்வொரு பூத்களிலும் எதையும் சமாளிக்க வல்ல 10 பேர் கொண்ட டீம் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு என்றே திரிபுராவில் பிஜேபிக்கு வெற்றி தேடித் தந்த சுனில் தியோதர் அவர்களை ஆந்திரா இன்சார்ஜ் வேலைகளை ஓரம் கட்டி வைத்து விட்டு மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.

பிஜேபியின் ஐடி விங்க் தலைவரான அமித் மாலவியாவை கோ இன்சார்ஜாக மேற்கு வங்காள தேர்தல் பணி செய்ய அனுப்பி விட்டார்கள். மேற்கு வங்காளத்தை 5 மண்டலமாக பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொலிடிக்கல் ஜெயண்ட்களை நியமித்து இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பாஸ் நம்ம பிக்பாஸ் அமித்ஷா தான். பிரசாந்த் கிஷோரை மேற்கு
வங்காளத்தில் தோற்கடிக்க பிஜேபிபடை தயாராக இருக்கிறது.

மேற்கு வங்காளம் மாதிரியே தமிழகத்திலும் பிரசாந்த் கி ஷோரின் ஐபேக் டீம் திமுகவுக்கு அளிக்கும் வியூகங்களை முறியடிக்க விரைவி ல் மிகச்சிறந்த பிஜேபி டீம் வர இருக்கிறது.

மம்தா பானர்ஜியின் ஆலோசனையின் பேரில் தான் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க ஒப்பந்தம் ஆனார். மம்தாவே இப்பொழுது எப்படி ஜெயிக்க முடியும்? என்று தலை முடியை பிய்த்து கொண்டு இருக்கிறார்.

ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவே முடியாம ல் தலையை பிய்த்து இப்பொழுது விக்வைத்து இருக்கிறார்.

ஒரு ஒரு மாநில தேர்தலை முன் வைத்து தான் பிரசாந்த் கிஷோர் இதுவரை அரசியல் ஆலோசனைகளை கூறி வெற்றி பெற்று வந்து இருக்கிறார்.

இப்பொழுது 2 மி கப் பெரிய மாநிலங்களில் திமுக மற்று ம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரே நேரத்தில் அரசியல் ஆலோசனை வழங்கி கொண்டு இருக்கிறார்.

10 வருடமாக ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் 10 வருடமாக ஆட்சிக்கு வர முடியாமல் தவிக்கும் திமு கவுக்கும் ஒரே நேரத்தில் வியூகங்களை
உருவாக்க முடியாமல் பிரசாந்த் கிஷோர் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.

கடைசியில் மம்தா பானர்ஜியும் ஸ்டாலினும் உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று ஒப்பாரி வைத்து பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை முடித்து வைக்க இருக்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் இதுவரை ஓடுகிற குதிரையில் அமர்ந்து வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டு இருந்தார்.

இப்பொழுது ஓடுகின்ற குதிரைகளை விழவைத்து அவரும் குதிரைகளுக்கு அடியில் விழுந்து மண்ணோடு மண்ணாக இருக்கிறார்.

Exit mobile version