புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

கோவில் நகைகளை ஏன் உருக்கவேண்டும்? ஏன் கோவில் நிலங்களை பட்டா போடவேண்டும்? ஏன் கோவிலிலே புது அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும்?

ஏன்னா ஊழல் செய்து கொள்ளையடிக்க வேறு எந்த இடமும் இல்லை. பொதுப்பணித்துறை எல்லாம் சும்மா. நூத்துக்கு அஞ்சு ரூவா பத்து ரூவான்னு அடிச்சு எப்போ போட்ட காசை எடுக்கறது? அப்படியே அடிச்சாலும் முன்ன மாதிரி பதுக்கமுடியல. வெளிநாட்டுக்கு அனுப்பி அதையே திரும்ப கொண்டு வந்து கருப்பை வெள்ளையாக்க முடியல.

இந்த மோடி இருக்காரே மோடி அம்புட்டு பண்ணியிருக்கார். எட்டுவழிசாலை, விமானநிலையம், புது தொழிற்சாலைகள் அப்படீன்னா அது நடக்காது ஏன்னா வளர்த்துவிட்ட எருமைகள் தலையிலேயே பாயும். நீட்டினால் மருத்துவகல்லூரிகள் மூலம் வந்த மூன்றாயிரம் கோடிகள் காலிஜிஎஸ்டி கேக்கவே வேண்டாம். கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டிலே.இப்போ லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடின்னு அடிக்ககூடிய ஒரே இடம் கோவில் சொத்துக்கள் தான்.நகைகள், சிற்பங்கள், உற்சவமூர்த்திகள், நிலங்கள் என முழு கட்டுப்பாட்டிலே இருப்பது இந்துக்கோவில்கள் மட்டும் தான். எனவே தான் இதிலே இறங்கியிருகிறதுகள். இளிச்சவாய இந்துக்கள் சம்பாதித்து கோவிலே கொண்டு போய் காணிக்கை, நகைகள், சொத்துக்கள் என குவிப்பார்கள்.

தொடர்ந்து ஆட்டைய போட்டுட்டே இருக்கலாம். இங்கே மட்டும் அல்ல. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலே இருந்து ஆந்திர அரசுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை நூறுமடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். முன்னாடி 2.5 கோடி கொடுத்துக்கொண்டிருந்த திருப்பதி தேவஸ்தானம் இப்போது வருடம் 50 கோடி ஆந்திர அரசுக்கு கொடுக்கவேண்டும். கேரளாவிலே சம்பளம் கொடுக்க வசதியில்லை என கோவில் குளத்திலே மீன் பிடித்து சுட்டு தின்ன காண்டிராக்ட், கோவில் நகைகள் விளக்குகளை விற்க கான்டிராக்ட் என இந்த கோவில் கொள்ளையானது அமோகமாக நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

என சமூகஆர்வலர் ராஜசங்கர் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version