இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை தகவல் படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,40,215 உயர்ந்துள்ளது அதேபோல் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 237195 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9440 பேர் குணமடைந்துள்ளனர்.குணமடைவோர் விகிதம் 55.77% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா பரவுவதை இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே வென்டிலேட்டர் தயாரிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதே போல் தயாரித்து வழங்கியும் வருகிறது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் கொரோனா சிறப்பு பிரிவுகளுக்கு சப்ளை செய்வதற்காக, PM CARES நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50000 வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. PM CARES நிதியில் இருந்து இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளது