காவல்துறையா இல்ல தி.மு.கவின் கட்சி நிர்வாகிகளா?: திமுகவுக்கு எதிரான போஸ்டர்களை கிழித்த காவல்துறை!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தலில் பல்வேறு வாக்குறுதி வழங்கப்பட்டன. அதில் முக்கியமானதாக இருந்தது. நீட் தேர்வுக்கு தடை, சிலிண்டருக்கு 100 குறைப்பு, குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ருபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே முதியோருக்கு 1000 ருபாய் வழங்கப்பட்டு வருகிறது திமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாயாக வழங்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என மக்களை கவரும் பல வாக்குறுதி வழங்கி ஆட்சியையும் பிடித்தது.திமுக.

சொன்ன வாக்குறுதிகள் செயல்படுத்தாமல் இருக்கும் திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம்அ.தி.மு.க போராட்டம் செய்தது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதி அளித்துவிட்டு அதை செய்யாமல் குழு அமைத்து காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு. நீட் தேர்வும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் விலைவாசி உயர்வு, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தின் ஒருபகுதியாக குனியமுத்தூர் பகுதியிலும், ஓசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், ரத்தினபுரி பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அங்கு திமுக அரசுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இரவு நேரத்தில் அங்கு சீருடை அணிந்து வந்த போலீசார் போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து அகற்றியுள்ளனர்.

அரசின் தவறை சுட்டிக்காட்டி ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினால், போஸ்டர்கள் ஒட்டினால் காவல்துறையை வைத்து அதனை அகற்றுவது கீழ்தரமான செயல் என்று விமர்சித்து அதிமுக.,வினர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் https://player.vimeo.com/video/580236051

Exit mobile version