பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி.. புகார் சொன்னவர் கைது .. மனவருதத்தில் அவரது மகன் தீ குளித்து தற்கொலை !

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவமிபண்டகசாலை நியாய விலைக்கடையில்தனக்கு வழங்கப்பட்டபொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில்பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்ற பெரியவர் மேல் ஜாமினில் வர இயலாத வழக்கினை திருத்தணி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நந்தன் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதில் இருந்த புளியில், இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதை நந்தன் தனது உறவினர்களிடம் தெரிவித்தாராம். இதனால் இந்த விஷயம் ஊருக்குள் வேகமாக பரவியது. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகக் குற்றம்சாட்டிய திருத்தணி அதிமுக பிரமுகர் நந்தன் மீது வழக்குப் பதிவு செய்து அவரது மகனுக்கு காவல் துறையினரின் கொடுத்த நெருக்கடி காரணமாக மனஉளைச்சலில்  தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட குப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (36). இவர், சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன், அதிமுக திருத்தணி 15-வது வட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார் இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகச் சொல்லி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, நந்தன் மீது திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இதை அறிந்த அவரது மகன் பாபு என்கிற குப்புசாமி (வயது36) இன்று 11-01-2022 பிற்பகல் 4.30 மணியளவில்தன் மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவ மனையில் இருந்துசென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனைக்குமேல் சிகிச்சைக்காக சேரக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவிக்கையில் இது போன்ற நிகழ்வுகளில் யாரும் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியல் இறங்கவேண்டாம் என்று பொதுமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.த

திருத்தணியை சேர்ந்த திரு.நந்தன் மீது புனையப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்வதோடு,பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் குறைந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது ஜாமினில் வர இயலாத வழக்கினை பதிவு செய்ய வேண்டும். இந்நிகழ்வுகளுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டன பதிவை தெரிவித்துள்ளார்.

Exit mobile version