படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியின்றி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள . சமூக வலைதளமான டுவிட்டரில் மிகவும் ஆர்வத்துடன் கருத்துக்களை பகிர்வது ஆபாச சித்தார்த்தின் வழக்கம். அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு எதிராகவும் , பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியினருக்கு எதிராகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியவகையில் கருத்து பதிவிட்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் தான் இந்த பாய்ஸ் பட ஆபாச சித்தார்த்.
இந்த நிலையில் அண்மையில் பஞ்சாப் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கருத்து பதிவிட்டார் இந்த பதிவில் பிரதமருக்கு ஆதரவாகவும் பதிவிட்டார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். அவர் பதிவில் : நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் ? என்று கேள்வி எழுப்பியதோடு பாரத் ஸ்டேண்ட் வித் மோடி, என்ற ஹேஷ்டாக்கையும் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 5 ந்தேதி பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவிடப்பட்ட சாய்னா நேவாலின கருத்துக்கு 5 நாட்கள் கழித்து எதிர் வினையாற்றும் நோக்கில் வழக்கம் போல டுவிட்டரில் கருத்து பதிவிட்டார் நடிகர் சித்தார்த். “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்… ஆண்டவருக்கு நன்றி… எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் இருக்கிறது.. வெட்கப்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்..மிகவும் ஆபாசமாக முறையில் அவதூறாக விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.இந்நிலையில் உங்கள் ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாக நடிகர் சித்தார்த் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. தங்களது ட்வீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் தான் என் சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















