யோகியின் அடுத்த அதிரடி ! குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் புகைப்படதுடன் கூடிய போஸ்டர் அடித்து ஒட்டப்படும்!

பெண்களை துன்புறுத்துதல் அவர்களை பாலியல் முறையில் சீண்டுதல் போன்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது யோகி ஆத்யநாத் தகுந்த தண்டனை மற்றும் குற்றவாளிகளின் புகைப்படத்தை மாநிலம் முழுவதும் பொது பொது இடங்களில் சுவரொட்டி அடித்து விளம்பரப்படுத்த உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற சுவரொட்டிகளை சாலை சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்துமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவபவர்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் “பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்துவதில் ஈடுபட்ட குற்றவாளிகளின் அவர்கள் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள்,மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளிலும் பொது மக்கள்
கூடும் இடங்களிலும் மக்கள் பார்வை படும் இடங்களிலும் குற்றவாளிகளின் முகத்துடன் கூடிய போஸ்டர் வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு உதவி செய்பவர்களின் பெயர்களையும் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்திர பிரதேச முதல்வர் யோகி முடிவெடுத்துள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் கான்பூரில் ஒரு தலித் இளம் பெண் தான் இரண்டு ஆண்களால் தாக்கப்பட்ட்டுள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை போஸ்டர் அடித்து ஓட்டும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கான்போரில் பெண்ணை துன்புறுத்திய குற்றவாளிகள் இரண்டுபேரும் அந்த இரண்டு கைது செய்யப்பட்டனர், அவரகள் மீது கொலை முயற்சி, துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் மற்றும் எஸ்.சி / எஸ்.டி (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் யோகி ஆத்யநாத் கூறுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஏதேனும் சம்பவம் நடந்தால், பீட் இன்-சார்ஜ், அந்த பகுதி காவல் பொறுப்பாளர், காவல் நிலைய அதிகாரி மற்றும் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் பொறுப்பேற்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ரோமியோ எதிர்ப்பு குழுக்கள் செயல்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சரிபார்க்கும் உத்தி பயனுள்ளதாக இருக்கும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

ஏற்கனவே யோகி ஆதித்யநாத் அரசாங்கம் லக்னோவில் பொதுசொத்துகளை சேதப்படுத்திய, CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் புகைப்படங்களை ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னதாகவே இதே போல போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version