தி.மு.க அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு! ஒரு வேளை அணில் ஓடிருக்குமோ! தரமான சம்பவம்!

தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்துமின்சாரம் விநியோகம் சீராக இல்லை. பகல் பொழுதுகளில் பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு நீர் இருந்தும் பாய்ச்ச முடியவில்லை. மேலும் இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கிராமங்களில் மட்டுமல்ல பல நகரங்களில் மின் தடை என்பது தொடர்கிறது.

இந்த நிலையில் மதுரை பாலமேடு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசிக்கொண்டிருந்தபோது மின்வெட்டு ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும் அங்கு இருந்தவர்கள் அணில்கள் ஓட தொடங்கியிருக்கும் கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்.

கடந்த அ.தி.மு க ஆட்சியின் போது நிதி ஒதுக்கப்பட்டு ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டது இதனை திறக்க திமுக அமைச்சர் மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திமுக அமைச்சர்கள் பேசி கொண்டிருந்தபொழுது மேடையில் மைக் வேலை செய்யவில்லை.

இதை சமாளிக்க அமைச்சர் ஜெனெரேட்டர் வைத்தால் அரசுக்கு 5 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால் வைக்கவில்லை என்று மழுப்பலாக பதில் கூறினார் மின்சாரம் சரியாக வந்தால் அப்புறம் எதற்கு ஜெனெரேட்டர் என கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.

தொடர் மின் வெட்டால் தமிழக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் வேளையில் தமிழக அமைச்சருக்கே இந்த நிலைமையா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version