தெலுங்கானா பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் குமார் நடிகர் சங்க தேர்தலில் தேச விரோத சக்திகளை தோற்கடித்து விஷ்ணு மஞ்சுவை வெற்றி பெற வைத்த தெலுங்கு நடிகர் சங்க அமைப்பான MAA உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.இதில் இருந்தே தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் அரசியல் பின் புலங்களுடன் நடைபெற்று இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப ஆதரவு இடது சாரி சிந்தனையாளர்களி ன் தொடர் பிரச்சாரம் என்று 2 மாதத்தி ற்கு முன்பே தெலுங்கு நடிகர் சங்க தேர்தலான MAA தேர்தலில் பிரகாஷ் ராஜ் கல க்கி கொண்டு இருந்தார்.ஆனால் அந்தோ பரிதாபமாக நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் படு
தோல்வி அடைந்து இருக்கிறார்.தேசிய சிந்தனையாளரான நடிகர் மோகன் பாபு பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் அவருடைய குடும்பத்தை தெலுங்கு சினிமாவில் உள்ள பிஜேபி குடும்பம் என்றே கூறலாம்.
பிரகாஷ் ராஜ் தீவிரமான மோடி எதிர்ப்புளர்.பிஜேபியையும் இந்துத்வா சிந்தனை களையும் எதிர்த்து அடிக்கடி உளறிக்கொ ண்டு இருப்பவர் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 56 இஞ்ச் மார்புடைய மோடியி ன் பிஜேபி 56 தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியாது என்று கூறியவர்.
அந்த பிராஷ்ராஜை மோடியின் தீவிர ஆதரவாளரான நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு 106 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறார்.விஷ்ணு மஞ்சுவுக்கு 380 ஓட்டுக்களும் பிரகாஷ் ராஜூவுக்கு 274 ஓட்டுக்களும் கிடைத்து இருக்கிறது.
காமெடி என்னவென்றால் கம்யூனிசம் பேசும் பிரகாஷ் ராஜூவுக்கு ஆதரவாக தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு பட உலகின் நலிந்த கலைஞர்கள் பலர் விஷ்ணு மஞ்சுவுக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.
இதனால் தான் பிரகாஷ் ராஜூவுக்கு ஆதரவாக இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தேர்தல் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது இருந்தாலும் புதிய தலைவர் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வுக்காக பாடுபடுவார் என்பதால் விஷ்ணு மஞ்சுவை பாராட்டி இருக்கிறார்.
இந்த தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை யெல்லாம் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி பிரகாஷ் ராஜ் வண்டி வண்டியாக அள்ளிவிட்டு பார்த்தார். ஆனால் வேலைக்கு ஆக வில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பிரகாஷ் ராஜூவுக்கு ஆதரவாக
வும் வறுமையில் வாழும் நடிகர்கள் விஷ்ணு மஞ்சுவுக்கு ஆதரவாகவும் இருந்து இருக்கிறார்கள்.
சுமார் 800 ஓட்டுக்கள் உடைய ஒரு நடிகர் சங்கத்தேர்தலில் பல முண்ணணி நடிகர் நடிகைகளின் ஆதரவுடன் போட்டியிட்ட
பிரகாஷ் ராஜ் அவர்களே..உங்கள் துறையில் உங்களை விட சிறிய நடிகரிடம் படுதோல்வி. அடைந்து இருக்கிறீர்கள்.ஆனால் மோடி பல கோடி மக்களின் வாக்குகளை பெற்று தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறார்.. அவரை யெல்லா ம் தரக்குறைவாக பேச உங்களு க்கு என்ன தகுதி இருக்கிறது?
செல்லம் இனியாவது அரசியல் பேசாமல் வாயை மூடிட்டு இரு..