பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

சோ விளக்கம்
படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன் ?
சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிரம்மதேவன் தன் மகளையே மணப்பது அக்னி தேவன் தன் மகளையே மணப்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம்.


இதை நான் என்னுடைய பாணியில் விளக்குகிறேன் .சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அதாவது ஒரே சொல் பல பொருள் பட கையாளப்பட்டிருக்கும்.


இப்போது திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம். “மகன் தந்தைக்காற்றும் உதவி என்நோற்றான் கொல் ” என்று எழுதியிருப்பதை தமிழ் சரியாக படிக்காத தமிழ் மேல் துவேஷம் கொண்ட ஒரு வெளிநாட்டு அறிஞர் “மகனே தன் தந்தையை கொன்று விட வேண்டும் ” என்று வள்ளுவர் கூறுகிறார் என்று அர்த்தம் கற்பித்தால் திருக்குறள் எவ்வளவு அனர்த்தம் ஆகுமோ அதேதான் சமஸ்கிருதத்தை தவறாகப் புரிந்துகொண்டு இவர்களால் எழுதப்படுவது!


சூரிய தேவன தன் இரு மனைவிகள் புணர்ந்தான் என்று மேம்போக்காக அர்த்தம் பண்ணிக் கொள்ளுtம் மேதாவிகள் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். சூரியன் என்பது வெளிச்சத்தின் உருவகம். சாயா என்பது இருளில் உருவகம். காலை நேரம் சூரியன் இருள் மீது படர்ந்து வெளிச்சத்தை உருவாக்கினான் என்பதுதான் அதன் அர்த்தம். சூரியன் தமிழ் சினிமா ஹீரோ ஹீரோயின் மேல் விழுவது போல் விழுந்து அவன் காம இச்சையை தீர்த்துக் கொண்டான் என்று அர்த்தம் கிடையாது!


அதேபோல் பிரம்மா என்னும் ஸ்ருஷ்டி, தானே உருவாக்கிய சரஸ்வதி என்ற ஞானம் அல்லது அறிவு உள்வாங்கி சங்கமித்து மனித அறிவை படைத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும்.


அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கற்பித்தால் மேலே சொன்ன கேள்விகள் தான் உருவாகும். திருக்குறள் புருஷசூக்தம் மட்டுமல்ல.
அலையன்ஸ் என்று ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது. ஹிந்து பேப்பரில் ஒரு கணவன் மனைவியை தேடுவதும் அலையன்ஸ் தான், சோனியா காந்தி கருணாநிதியுடன் செய்துகொண்டது அலையன்ஸ் தான்.

முன்னது வேறு அர்த்தம் பின்னது வேறு அர்த்தம். ஆனால் நான் ஆங்கிலம் மேலுள்ள அரைகுறை ஞானம் அல்லது காங்கிரஸ் மீது உள்ள துவேஷம் காரணமாகவோ சோனியாகாந்தி கருணாநிதியை திருமணம் செய்து கொண்டார் என்று மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் திமுக காரர்களுக்கு?


அதனால் மொழி பல அர்த்தங்களைக் கொடுக்கும். அந்த இடத்தில் என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொண்டு எழுத அறிவு வேண்டும். அது சத்தியமாக பெரியார் புத்தகங்களை படிப்பவர்களுக்கு இருக்காது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!

Exit mobile version