உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின் நலம் விசாரித்த மோடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிறது. 24 நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைகிறது . இதனை தொடர்ந்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அகாலி தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உட்பட 33 அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும் போது , “இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில் கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகிறது மத்திய அரசு” என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடியை பொறுத்தவரையில் அவரை எந்த கட்சியினர் விமர்சனம் செய்தாலும், அரசின் சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்தாலும் அதை கண்டு கொதித்து போக மாட்டார். அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுவார். அது தான் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நேற்று நடந்த கூட்டத்தில் வைகோ பேசியது உண்மையில் மிக கடுமையானது.

பிரதமர் மோடி அதை பெரிதாக பொருட்படுத்தாமல், கூட்டம் முடிந்த கையோடு நேராக வைகோவிடம் சென்று பேசினார். வைகோவின் கையைபிடித்து குழுக்கி நலம் விசாரித்தார். திடீரென பிரதமர் மோடி தன்னிடம் நலம் விசாரித்ததால் உணர்ச்சிவயப்பட்டவராக வைகோ காணப்பட்டார். இதை பார்த்துமற்ற எம்பிக்கள் மலைத்துபோயினர். என்னதான் தன்னை விமர்சனம் செய்தராக இருந்தாலும் வைகோவை பிரதமர் மோடி தேடி சென்று நலம் விசாரித்ததை பலரும் பாராட்டுகிறார்கள்.

மேலும் முன்பொரு முறை தினத்தந்தி விழாவுக்கு தலைநகர் சென்னைக்கு பிரதமர் அவர்கள் மோடி வந்திருந்த வேளையிலும் பார்வையாளர் வரிசையில் பின்னால் அமர்ந்திருந்த வைகோவின் இருக்கைக்கே சென்று கரம் கொடுத்து சென்றார் அதுபோன்றே நேற்றும் தலைநகர் டெல்லியில் வைகோவின் அருகினில் சென்று உடல் நலம் விசாரித்திருக்கிறார். எவ்வளவு விமர்சனம் செய்தாலும் யாராக இருந்தாலும் நட்புக்கு மதிப்பளித்திட வேண்டும் என்னும் நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி அவர்கள்.

Exit mobile version