சோழர் காலத்தை சேர்ந்த பல சிலைகளை அமெரிககாவிடம் இருந்து நாம் பெற்றுள்ளோம் பிரதமர் மோடி.

2 ஆயிரம் ஆண்டு பழம்பெரும் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து மீட்டு நமது அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளோம் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு கூறினார்.இந்தியாவுக்கு சொந்தமான 100 அரிய வகை மற்றும் பழங்கால பொருட்களை, அமெரிக்கா நம்மிடம் திருப்பி தந்துள்ளது. இந்த பொருட்கள் 250 முதல் 2,500 ஆண்டுகள் பழமையானவை. இவை இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்தவை.

சோழர் காலத்தை சேர்ந்த பல சிலைகளும் அதில் அடங்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்துடன் தொடர்புடைய 12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவி சிலைகள் மற்றும் கடவுள் முருகன் சிலை திருப்பி கொண்டு வரப்பட்டன. 11ம் நூற்றாண்டை சேர்ந்த, நந்தியில் அமர்ந்தவாறு காணப்படும் உமா மகேஸ்வரி சிலையும், ஜெயின் தீர்த்தங்கராக்கள் சிலையும் இந்தியா திரும்பி உள்ளது.இந்தியா கொண்டு வரப்பட்ட சூரிய பகவான் சிலையில் உள்ள மரச்சட்டம் 16 -17 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இது தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த விலை மதிப்பு மிக்க சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்த அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஹஜ் கொள்கையில் சவுதி அரசு மாற்றம் செய்துள்ளது. இதுவரை 4 ஆயிரம் முஸ்லிம் பெண்கள், ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்க்கொண்டுள்ளனர். இதற்காக சவுதி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மக்கள் போதைப் பழக்கங்களை கைவிட்டு உடலை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Exit mobile version