சொத்துரிமை ஆவண அட்டை திட்டம் ! பினாமிகளின் அட்டகாசம் கட்டுபடுத்தபடும்

உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்களே தங்கள் சொத்துகளுக்கு உரிய சட்டபூா்வ ஆவணங்களை வைத்திருக்கிறாா்கள். சொத்துரிமை ஆவணங்களை வைத்திருப்பது ஒரு நாட்டின் வளா்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தும் என்று வல்லுநா்கள் வலியுறுத்துகிறாா்கள். இதைக் கருத்தில் கொண்டு, சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோா் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். மேலும், கிராமங்களில் வசிக்கும் இளைஞா்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் பெற முடியும். இதன்மூலம் அவா்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, சுயசாா்புடன் அவா்கள் வாழ்வதற்கு வழிவகுக்கும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நில உரிமை தொடா்பான தெளிவான ஆவணங்களை அதன் உரிமையாளா் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இந்த திட்டத்தால், நில உரிமை தொடா்பான தகராறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் சொத்து விவர அட்டை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.மோடி தொடங்கி வைத்திருப்பது மிகபெரிய காரியம், இது தமிழ்நாட்டில் அமல்படுத்தபடும் பொழுதுதான் திராவிட கட்சிகள் செய்து வைத்திருக்கும் மிகபெரிய நில மோசடியும் வரைமுறையற்ற சுரண்டலும் வெளிவரும் யார் உண்மையான விவசாயி என்பதும்? யார் போலி என்பதும்? யார் அரசின் இலவச மின்சாரம் முதல் விவசாய லோன்களை தவறாக பயன்படுத்தி கொள்ளை அடிக்கின்றான் என்பதும் தெரியும் பினாமிகளின் அட்டகாசம் கட்டுபடுத்தபடும்

இந்த சட்டம் இதுகாலம் கணக்கில் வராத பல வகை நிலங்களையும், பாரம்பரிய சொத்துக்களில் உள்ள குளறுபடிகளை நீக்கி புதிய நில சீர்திருத்தத்தை செய்து, விவசாயிகளுக்கு அரசு வழங்கும் திட்டம் மிக சரியாக செல்ல உதவும் தேவைபட்டோருக்கு மட்டும், அதுவும் நேரில் வருவோருக்கு மட்டும் ரேஷன் பொருள் என பல ரேஷன் மோசடிகளை அரசு தடுத்திருப்பதும் குறிப்பிடதக்கது இதனால் முறைகேடாக அரசின் தானியங்கள் வீணாகாது, ஏற்றுமதி அதிகரிக்கும், விவசாயிகளின் நில சீர்திருத்தம் மூலம் அரசின் பல திட்டம் புல்லுக்கு பாயாமல் நெல்லுக்கு மட்டும் சரியாக பாயும் மிக சரியான சீர்திருத்தத்தை அறிமுகபடுத்தியிருக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து அவரின் நல்ல திட்டங்கள் தொடரட்டும் தேசம் செழிக்கட்டும்

Exit mobile version