குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

சென்னை சுங்கத்துறை, மே 10 ம் தேதி அன்று சென்னை வந்த மூன்றாவது சிறப்பு விமானத்தின் பயணிகளுக்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் எளிய நடைமுறைகளைப் பின்பற்றி உதவியது. குவைத்தில் இருந்து 171 பயணிகளோடு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 396 விமானம், ஞாயிறு இரவு 09:34 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

சொந்த நாட்டுக்கு பயணிகளை அழைத்து வந்த விமானத்தில் 107 ஆண்கள், 60 பெண்கள் மற்றும் 04 குழந்தைகள் என மொத்தம் 171 பயணிகள் வந்தனர். ஒரு பயணி சக்கர நாற்காலியை உபயோகித்தார். அனைத்து பயணிகளுக்கும் எளிதான முறையில் சுங்க நடைமுறைகள் செய்து முடிக்கப்பட்டன.

கோவிட்-19 பெரும் தொற்று சூழ்நிலையின் காரணமாக, மார்ச் 22 ம் தேதி முதல் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. கோவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டம்  மே 7 ம் தேதி அன்று தொடங்கப்பட்டு, மே 13 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் சென்னைக்கு 11 விமானங்கள் வந்து சேரும்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஓமன், கோலாலம்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அடுத்த சில தினங்களில் விமானங்கள் வரவுள்ளன.

Exit mobile version