ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிவாரண நிதி!

உலகத்தை ஆட்டி படைத்தது வரும் கொடிய வைரஸ் கொரோனா. இது உலக அளவில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள் இந்தியாவில் த்ரோபோது வரை 1000 மக்களுக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் தானும், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளதாக கோயல் கூறினார்.

Exit mobile version