தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் : வானிலை முன்னெச்சரிக்கை.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ. நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்  தென்மேற்கு பருவமழை, இந்தாண்டு சராசரி அளவில் இருக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால சராசரியில் (LPA) 96 முதல் 104 சதவீதம் இருக்கும் எனத் தெரிகிறது.

ஆ. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை அளவு நீண்ட கால சராசரி அளவில் 101 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 1961ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை நீண்டகால சராசரி மழை அளவு 88 சென்டி மீட்டராக இருந்துள்ளது.

இ. பருவமழை பரவலாக இருக்கும் எனத் தெரிகிறது. நாட்டின் பல பகுதிகளில், பருவமழை சராசரி அளவிலும், சராசரி அளவுக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version