ராம நவமி கொண்டாட இந்தியா தயாராகின்றது, ஆலயங்களில் கொண்டாடமுடியாதே தவிர அவரவர் வீட்டில் இருக்கும் சூழலுக்கு தக்க கொண்டாடலாம்
ராமரின் வாழ்வில் ஒரு உருக்கமான கட்டம் உண்டு. ஒரு தகப்பனுக்கும் தாய்க்கும் மூத்த மகன் மேல் இருக்கும் பாசம் இயல்பானது, அதுவும் அரசுக்குரியவன் என்றால் கேட்கவே வேண்டாம்
அப்படிபட்ட ராமன் வனவாசம் தொடங்கி காட்டுக்கு செல்லும் நேரம்மது, தசரதனும் கவுசலையும் அலறி துடிக்கின்றார்கள்,
“என் உயிர் என் கண்முனே என்னை போகின்றது விசுவாமித்திரா..” என கதறுகின்றான் தசரதம்
விசுவாமித்திரன் அமைதியாக சொல்கின்றான், “தசரதா.. கோடி கொடுத்தாலும் ஏன் உலகையே கொடுத்தாலும் ராமன் உன்னை பிரிவானா? அவனுக்கு உன்னை விட பெரியவர் யார்? தந்தை பாசத்தில் அவனை மிஞ்சுவார் உண்டோ?
அவனா உன்னை பிரிவான்? இல்லை, அவன் விதி அவனை இழுத்து செல்கின்றது
விதியினை பணமோ, ராஜ்ஜியமோ, அரசோ, அரசனோ, அதிகாரமோ தடுக்கமுடியுமா? விதியினை மாற்றும் சக்தி எவனுக்கு உண்டு? அதை அறியாதவனா நீ?”
ஆம், ஒவ்வொரு வெளிநாட்டுவாசியும் விமான நிலையத்தில் கண்ணீரை துடைக்கும் பொழுது நினைவுக்கு வரும் காட்சி அது
பணம் மட்டும் ஒருவனை வெளிநாட்டுக்கு தள்ளுவதில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நிர்பந்தம் உண்டு, அந்த நிர்பந்தத்தின் பெயரே விதி
ராமன் உதாரண நாயகன், ஒவ்வொருவரும் அவனில் ஆறுதல் அடைய ஒவ்வொரு விஷயம் உண்டு. வெளிநாட்டு வாசி அந்த மேற்கண்ட காட்சியில்தான் ராமனில் ஆறுதல் அடைய முடியும்
அவதாரமும், வீரனும், நல்லவனும், ராஜ்ய அதிபதியும், நல்ல மனைவியும், நல்ல உடன்பிறப்புக்களை பெற்ற ராமனே விதிக்கு தப்பமுடியவில்லை காடு காடாக அலைந்தான் எனும்பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம்?
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.