பா.ஜ.கவின் பலம் அறிந்த பா.ம.க! நன்றி மருத்துவர் ராமதாஸ் ஐயா..
பா.ஜ.கவிற்கு வெள்ளமென திரளும் இளைஞர்களை மடை போட்டு தடுக்கமுடியாது…
பா.ம.க நிறுவனரும் மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இளைஞர்கள் பா.ஜ.கவிற்கு செல்வததை தடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுளார். இச்செய்தி மூலம் அவர் சொல்ல வருவது பா.ம.கவிலிருக்கும் இளைஞர்கள் பாஜகவை நோக்கி வெள்ளமென திரண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் திராவிட வாரிசு அரசியலை கையிலெடுத்து தனது மகன் அன்புமணி ராமதாஸை பா.ம.க கட்சியின் தலைவராக நியமித்ததை பாமகவில் உள்ள இளைஞர்கள் விரும்பவில்லை என்பதை மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெட்டவெளிச்சமாகி உள்ளது.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் அண்ணன் அண்ணாமலை அவர்களின் தலைமையில் அசுர வளர்ச்சியை பெற்று வருகிறது பாஜக. மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக பாஜக திகழ்கிறது. பல போராட்டங்களை கையிலெடுக்கிறது. அதில் வெற்றியும் காண்கிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் சென்றடைந்துள்ளது இதன் மூலம் பிரதமர் மோடியின் மீதும் தமிழகமக்கள் கவரப்பட்டுள்ளார்கள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்ற திருக்குறலுக்கு ஏற்ப கடந்த 26 ஆம் தேதி 31 ஆயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு நீட் விலக்கு என பேசிவந்தார். அனைவரும் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு பிரதமர் மோடி அவர்கள் பதிலடி தருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் மக்கள் நல திட்டங்களை மட்டும் பேசி முதல்வர் ஸ்டாலினை அரவணைத்து நிகழ்ச்சியினை முடித்துவைத்தார். இது அங்கிருந்த திமுகவினரை மட்டுமல்ல இளைஞர்களை அதிக அளவில் கவரசெய்தது.
இது போல் நல்ல தலைவர்களை கொண்ட கட்சியை நோக்கி இளைஞர்கள் வருவது இயல்பான ஒன்று. புயல் கரையை கடந்து விட்டது.. இளைஞர்கள் பா.ஜ.கவை நோக்கி அலை அலையென படை எடுக்க தொடங்கிவிட்டார்கள்.
மேலும் யாரும் யாரையும் அங்க போகாத இங்க போகாத என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை… இளைர்களுக்கான இடம் எங்கு சரியாக இருக்கிறதோ அங்கே செல்வது அவர் அவர் உரிமை…என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இது பா.ஜ.கவிற்கான நேரம் என்பதினை ராமதாஸ் அவர்களின் அறிக்கை கூறிவிட்டது.
முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என பேச ஆரம்பித்துவிட்டார்.
அ.தி.மு.கவின் திரு.பொன்னையன் பா.ஜ.கவால் அதிமுக கட்சியைஅழித்து விடக்கூடாது என கூறினார்
பழம் பெரும் தமிழக தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமகாவிலிருந்து எந்த கட்சிகாரர்களும் பாஜகவில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
அண்ணாமலை அவர்கள் திமுக அரசு செய்த குளறுபடிகள் ஊழல்களை வெளிகொண்டுவந்தார். பொங்கல் தொகுப்பு ஊழல், அரசு சார்பாக பொங்கல் இனிப்பு கொள்முதல் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப்பட்டது, தருமபுரம் ஆதீனம் பல்லாக்கு தூக்க தடைநீக்கம் .விவசாயிகளுக்கு எதிரான அன்னூர் தொழில் பூங்கா திட்டம் அமைக்க எதிர்ப்பு திருவாரூர் ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படுவது கைவிடப்பட்டது, இன்னும் அண்ணாமலை அவர்களின் தலைமையில் பல போராட்டங்கள் அனைத்து போராட்டங்களிலும் வெற்றி…
இந்த வெற்றி இனி வரும் தேர்தல்களில் தொடரும் … 2026 சுதந்திர தினத்தன்று பாஜக மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களின் பொற்கரங்களால் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும். பா.ஜ.கவிற்கு வெள்ளமென திரளும் இளைஞர்கள் மடை போட்டு தடுக்க முடியாது. என்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயாவிற்கு நினைவூட்ட விரும்புகிறேன்.என புதியதாக தமிழக பாஜக இளைஞர் அணி மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ரமேஷ்ஷிவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.