இராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாஜக இளைஞரணி !திராவிட கட்சிகள் கலக்கம் !!

பாஜக இளைஞர் அணியால் ஸ்தம்பித்த இராமநாதபுரம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.

இதன் ஒருபகுதியாக இன்று இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சென்ற அவரை வரவேற்க்க 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் வந்தால் இராமநாதபுரமே ஸ்தம்பித்து நின்றது.இதனிடையே பாஜக இளைஞரணி யினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்த்து.

இதனை கண்ட திராவிட கட்சியினர் எப்படி இந்த நேரத்தில் இவர்கள் இத்தனை நபர்கள் வந்தார்கள் என்று கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் சென்ற வரம் இராமநாத புரம் கள்ளர் தெரு வசந்த நகரை சேர்ந்த அருண் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வயது 21 .மேலும் யோகேஷ் வயது (22) என்ற இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இராமநாதபுரத்தை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அவரது வீட்டிற்கு வினோஜ் செல்வம் செல்வதாக இருந்துள்ளது. இதை அறிந்து கொண்ட அந்த மாவட்ட நிர்வாகம் படை சூழ வந்த இளைஞரணியை நடுவழியில் நிறுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எள்ளலும் பாஜக இராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய ஊர்வலம் போல் இந்த வாகன பேரணி அமைந்தது, பஜேக்வின் இளைஞர் அணி மிகவும் துடிப்பாக வேலை செய்து வருகிறது. 2021 தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது என்பதே இந்த காட்சி உறுதி படுத்துகிறது. இளைஞர் அணி தலைவர் போகும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Exit mobile version