உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி, பாராளுமன்றத்திற்கு தேர்வானார். உத்திரப்பிரேதேசத்தில் உள்ள டோம்ரி கிராமத்தில் வசதி வருபவர் மங்கள் கேவத், இவரின் தொழில் ரிக்சா ஓட்டுவது. இவரின் மகளுக்குபிப்ரவரி 12ம் தேதி திருமணம் செய்து வைத்தார்.
தனது கல்யாணத்திற்கு அவரின் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் பாரத பிரதமருமான நரேந்திர மோடியை அழைக்க திருமண அழைப்பிதழை பிரதமரின் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.
திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு சிறிது நாட்கள் கழித்து, கேவத்திற்கு கடிதம் ஒன்று வந்ததுள்ளது. அந்த கிடைத்தும் அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.
அந்த கடிதமானது, தனது மகளின் திருமணத்திற்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் ஆகும். இதனை கண் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் பிரதமரை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தார்கள்.
இது தொடர்பாக கேவத் பேசுகையில் : தனது முதல் திருமண அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலும் வழங்கினேன்.
அதன் பின் கடந்த 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து வாழ்த்து கடிதம் வந்தது. சமூகத்தின் கடைசி மனிதரையும் பிரதமர் எவ்வாறு மதிக்கிறார் என்பதற்கு இந்த கடிதமே சாட்சி, என்றார்.
கேவத் மனைவி ரேணு தேவி கூறுகையில், உ.பி., வரும் பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எங்களது குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி அவரிடம் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி வாரணாசி நகர் வந்து மணமக்களை வாழ்த்தினார் .
இந்த நிகழ்வை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
நன்றி:- படம் பாலிமர் செய்திகள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















