வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..

SenthilBalaji-DMK

SenthilBalaji-DMK

திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி செ்ன்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

வேளச்சேரி, விஜயநகரைச் சேர்ந்தவர் சதீஷ் (35). திமுக ஐ.டி. பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். பின்னர் ஆணையர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக சதீஷை தடுத்து நிறுத்தி வேப்பேரிபோலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். பின்னர் போலீஸாரிடம் சதீஷ் கூறியதாவது:

176-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள ஆனந்தமும், நானும்நல்ல முறையில் பழகி வந்தோம்.மின் வாரியம், மாநகராட்சி, சுகாதாரத் துறை போன்றவற்றில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், யாராவது இருந்தால் சொல்லும்படியும் ஆனந்தம் என்னிடம் கூறினார். இதை நம்பி எனக்கு தெரிந்த 6 பேருக்கு வேலைக்காக சுமார் ரூ.18 லட்சம் பணத்தை கடந்த 2021-ம் ஆண்டில் 5 தவணைகளாக வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்தேன்

தற்போது ஒருவருக்கு மட்டும் மாநகராட்சியில் தற்காலிக பணி வாங்கிக் கொடுத்துள்ளார். தற்காலிக பணி என்பதால் பணம் கொடுத்தவர், வேலை வேண்டாம் பணத்தை திரும்பி கொடுங்கள் என்று கேட்டார்.

எனவே நான் ஆனந்தத்தின் அலுவலகம் சென்று அவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டேன். அதற்கு அவர், ‘வேலையும் தர முடியாது, பணத்தையும் திரும்பத் தர முடியாது’ என்று கூறினார். மேலும், என்னை 2 நபர்களுடன் சேர்ந்து தாக்கினார். கொலை மிரட்டல் விடுத்து எனது கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டனர்.

இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னிடம் பண மோசடி செய்ததோடு, என்னைத் தாக்கி நகையை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏற்கெனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அப்போதும் உரிய நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் ஆனந்தம் என்னை மீண்டும் மிரட்டுகிறார். நான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரை அழைத்துமிரட்டி என்னை வீட்டை காலி செய்ய சொல்லுமாறு தொந்தரவு செய்கிறார். கொடுத்த பணத்தை கேட்டால், “அமைச்சர் மா.சுப்பிரமணியன் எனக்கு ஆதரவுஅளிப்பார், நீ எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறி மிரட்டுகிறார்.

இதனாலேயே தற்கொலைக்கு முயன்றேன் என்று சதீஷ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

source தி இந்து.

Exit mobile version