மம்தா வெற்றி கொண்டாடிய RSB தமிழக ஊடகங்கள்! ஆனால் அங்கு உண்மை நிலவரம் என்ன?

பவானிப்பூரில் நடந்தது ஒரு இடைத்தேர்தல் அதாவது,எந்த கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மேற்கு வங்கத்தில் ஆட்சியமைத்துள்ளதோ? அந்த கட்சி தலைமையே போட்டியிட்ட தொகுதி.அந்த தொகுதியில் இதுவரை வெறும் பிராமணர்களும்,காயஸ்தாக்களும் மட்டுமே போட்டியிட்டு வென்ற தொகுதி.

திரிணாமூல் காங்கிரஸின் பலமான தொகுதி அது.அந்த தொகுதியில்தான் 2011 லும் மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக தொடர்ந்தார்..2021 லும் அதுவே நடக்கிறது. பா.ஜ.க என்கிற கட்சி மேற்கு வங்கத்தில் 2014 க்கு மேல்தான் உயிர் பெறுகிறது.2016 ல்தான் பவானிப்பூர் தொகுதியில் 20% வாக்குகளை பெற்று மேலெழுகிறது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் 40000 வாக்குகள் அதாவது 30% த்தை கையில் வைத்து இரண்டாவது கட்சியாக இருந்தது அந்த தொகுதியில். ஆனால் 2021 தேர்தலில் காங்கிரஸ் 4% வாக்குகளுக்கு போய்விட்டது பாஜகவோ 35% வாக்குகளுக்கு போய் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

2011 ல் இருந்து மம்தா கட்சியே பலமாக வெல்லும் தொகுதி பவானிப்பூர்.மேற்கு வங்கம் முழுவதும் நடந்தது போலவே,இந்த தொகுதியிலும் காங்கிரஸ் தனது மாற்று சக்தி என்ற இடத்தை பாஜகவிடம் இழந்துவிட்டது.
இந்த இடத்தில்,தற்போது நடந்த 2021 இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை,பேருக்கு கம்யூனிஸ்ட் போட்டியிட்டது.

பா.ஜ.கவும் அதிக மும்மரம் காட்டவில்லை ஆனாலும் 22% வாக்குகளை பெற்றுள்ளது..மேற்குவங்கத்தையே ஆளும் கட்சியின் தலைவி மம்தா அதிகாரத்தில் அமர்ந்தபடியே இந்த இடைத்தேர்தலில் வென்றுள்ளார்..
ஆனால்,அவர் ஏதோ பக்கத்து மாநிலத்தில் போய் வென்றது போல ஊடகங்கள் உருட்டிக் கொண்டிருக்கிறது.

Exit mobile version