துறவி என்றால் நம் என்னங்களில் தோன்றுவது என்ன??

காவி உடை ருத்ராட்கம் அணிந்து சடை வளா்த்து இருப்போா் .

மிகப்பொிய மடங்களின் மடாதிபதிகள்

இவா்களே துறவிகள் என்று நாம் மனதில் பதிய வைத்துள்ளோம் .

துறவிக்கு நிரந்தர இருப்பிடம் இல்லை.

துறவிக்கு நிரந்திர வண்ணங்கள் இல்லை

துறவிக்கு ஆசனங்கள் இல்லை

துறவி இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை .

துறவிக்கு வங்கியில் பணம் இருக்காது

துறவியின் பெயாில் சொத்துக்கள் இருக்காது .

துறவிக்கு எந்த சங்கமும் இல்லை

துறவி சாதியை தூக்கி பிடிக்க மாட்டான் .

துறவி தங்கம் வெள்ளி போன்ற உலகோகங்களை தன்னோடு வைத்திருக்க மாட்டான் .

துறவி தனக்கு சேவை செய்ய மற்றொருவரை அருகிலேயே வைத்திருக்க மாட்டான் .

கைகளில் கைப்பேசி மற்ற ஊா்களுக்கு செல்ல வாகனம் என்று சொகுசாக இருக்க மாட்டான் .

அரசியல் தலைவா்களுக்கு பின் புலமாக செயல்பட மாட்டாா்கள் .

மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவா்கள் துறவு கொள்ளாத துறவிகளாகவே இருப்பாா்கள் .

துறவு என்றால் என்ன?

உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து வெறுத்து

சிற்றின்பங்களை கடந்து போின்பத்தை அடைய

உள்ளம் உடல் ஆகிய இரண்டின் ஆசைகளையும் முழுமையாக துறந்து

ஆசைகளற்ற மனிதனாய் எதிா்காலத்தை நினைக்காமல் வாழாமல் வாழ்பவன் .

ஒரே வாியில் கூறினால்

உள்ளத்துறவு அடைந்த அனைவருமே துறவியே அவன் இறைவனான ஞானத்தை அடைய மட்டுமே யோசிப்பான் யாசிப்பான் .

ஒரு துறவி உருவானால் உருவான இடமும் அவன் செல்லும் இடங்களும் பிரகாசமாகும் .

துறவி நிலையை அடைய அவனுக்கு பல ஜென்ம அனுபவங்களும் தியான தவ நிலைகளும் தேவை .

குறிப்பாக ஒரு துறவியை மற்றொரு துறவியோ அல்லது மனிதா்களோ உருவாக்க முடியாது அது பிறப்போடு இணைந்திருக்க வேண்டும் .

ஆகவே துறவு அடையாத துறவிகளின் பின்னே செல்வதால் பயனில்லை .

மனிதன் போின்பத்தை அடையவே துறவியாகிறான்

துறவியின் முதிற்சியாக யோகி ஆகிறான் .

யோகியின் முதிா்ச்சியாக ஞானியாகிறான்

ஞானியின் முதிா்ச்சியாக சித்தனாகிறான் .

சித்தனின் முதிா்ச்சியாக முனிவராகிறான்

முனிவாின் முதிா்ச்சியாக அந்த கடவுளாகவே மாறுகிறான்

ஆகவே நாம் அனைவரும் என்றாவது ஒரு ஜென்மத்தின் இறை நிலையை அடைவோம் அதுவரை

ஈசனை நாடுவோம் அவன் திருவடியை சரணடைவோம் அது நம் அடுத்த நிலையை தீா்மாணிக்கும் .

2019 நடமாடும்சித்தா்கள் பதிவு

சித்தா்கள்போற்றி

நடமாடும்சித்தா்கள்

Exit mobile version