சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 காவலர்கள் ஒரு ஆய்வாளர் கைது செய்து விசாரனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

சாத்தான் குளம் விவகாரம் துறை ரீதியாக சில மோதல்களை ஏற்படுத்திய சம்பவம், 302ம் சட்டபிரிவில் வழக்கு சேர்க்கபடாதற்கு அதுதான் காரணம் என்கின்றார்கள் அதாவது அந்த இருவரும் காவல்நிலையத்தில் சாகவில்லை, அவர்கள் இருவரும் அரசுமருத்துவரிடம் அனுப்பபட்டிருக்கின்றார்கள், மருத்துவர் அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என சான்றிதழ் கொடுத்துத்தான் நீதிபதியிடம் அனுப்பியிருகின்றார்.

ஆக இருவரும் மருத்துவரிடம் ஏன் காவல்துறை உயிர்போகும் அளவு தாக்கபட்டதை அதாவது 3 லுங்கிகள் மாற்றும் அளவு ரத்தம் வந்ததை சொல்லவிலை என்பது தெரியவில்லை, மருத்துவரும் பின்பக்கம் எல்லாம் சோதித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை ஆக மருத்துவர் மேலும் சர்ச்சைக்கு வலு சேர்த்தது. அடுத்து மாஜிஸ்ட்ரேட், அவரிடமும் இருவரும் தாங்கள் கொடுமையாக தாக்கபட்டதாக சொல்லவில்லை மாஜிஸ்ட்ரேட்டும் அவர்கள் உடல்நிலைபற்றி சொல்லவில்லை ஒரு சிக்கலான முறையில் இந்த விசாரணை சென்று கொண்டிருந்த நிலையில் இருவர் கொலை சம்பந்தப்பட்ட வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ. பால்துறை என்பவர் கடந்த மாதம் கைதானார். , கைது செய்யப்பட்ட காவலர் பால்துறை உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 14ம் தேதி அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கடந்த மாதம் 24ம் தேதி பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

பால்ராஜூக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், கொரோனாவால் அவரது உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, 8ம் தேதி அவசர சகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்தார்.

Exit mobile version