கர்நாடகாவில் தடை செய்யப்டுகிறதா SDPI,PFI ! மத்திய குற்றப்பிரிவு அதிரடி! கலவரத்திற்கு காங்கிரசும் தொடர்பா?

கர்நாடகாவின் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.அகண்டா சீனிவாசமூர்த்தி இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். இவரின் உறவினர் ஒருவர் முகநூலில் இஸ்லாம் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார் இதனை தொடர்நது , டீ.ஜே. ஹள்ளியில் உள்ள எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டின் முன்பு கூடிய ஏராளமானோர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், வீட்டின் மீது கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

நிலைமையைக் கட்டுப்படுத்த டி.சி.பி பீமாஷங்கர் குலேட் கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளி காவல் நிலையதிற்கு சென்றபோது, ​​கோபமடைந்த கும்பல் அவர் மீது கற்களை வீசியது. காவல்துறையினர் டி.சி.பியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றபோதும், கும்பல் காரைத் தாக்கி சேதப்படுத்தியது. அவர்கள் வாகனத்தின் ஓட்டுநரையும் தாக்கினர்.முஸ்லீம் கும்பல்கள் வெளியில் இருந்து வாயில்களைப் பூட்டி காவல் நிலையத்தில் கற்களை வீசின. இரண்டு டி.சி.பிகளின் இன்னோவாஸ் உட்பட குறைந்தது 10 வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு முன்னால் சேதமடைந்தன. டி.ஜே.ஹல்லி காவல் நிலையம் முன் இருந்த வாகனங்களுக்கும் கும்பல் தீ வைத்தது. வன்முறை சம்பவத்தை தங்கள் தொலைபேசி கேமராக்களில் படம்பிடிக்கும் ஊடக நபர்களை கூட இந்த கும்பல் தாக்கியது மற்றும் சுவர்ணா செய்தி ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர். கேமராக்கள் மற்றும் மொபைல்கள் பறிக்கப்பட்டு முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு வன்முறை குற்றச்சாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார் . மேலும் மத்திய குற்றப்பிரிவின் மூன்று குழுக்கள் செவ்வாய்க்கிழமை இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) மூன்று அலுவலகங்களில் அதிரடி சோதனையை நடத்தியது. .ஆகஸ்ட் 11 ம் தேதி நடந்த பெங்களூரு கலவரத்தில் SDPI மற்றும் அதனுடன் இணைந்த பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) கட்சிகளின் ஆதரவால்தான் அந்த கலவரம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடக அரசு அக்கட்சிகளைத் தடை செய்ய பரிசீலித்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகின்றது. மேலும் கலவரம் நடந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளின்படி, கும்பல் வன்முறையில் SDPI கட்சியை சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

பெங்களூர் முன்னாள் நகர மேயரின் தனிப்பட்ட உதவியாளரும், காங்கிரசின் உள்ளூர் கார்ப்பரேட்டருமான சம்பத் ராஜ் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலவரத்தைத் தூண்டுயதற்காகவும், பொதுச் சொத்துக்களை அழித்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த கலவரத்தில் காங்கிரஸிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துளளது.

Exit mobile version