தம்பியால் வந்த வினை எதிர்பார்க்காத செந்தில் பாலாஜி அண்ட் கோ … ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு.. சிக்கலில் திமுக…

Senthil Balaji, AshokKumar Ed

Senthil Balaji, AshokKumar Ed

அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடியாக நிராகரித்துள்ளது.

இன்றைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்து அவரின் ஆதரவாளர்கள் மாறும் திமுகவினருக்கு பேரிடியை இறக்கியது நீதிமன்றம் . ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு மிக முக்கியமான காரணம் தெரியவந்துள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி, பைபாஸ் ஆபரேஷன் என பல விஷயங்கள் அரங்கேறியது. அதன் பின்னர் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜி தரப்பில் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு, மூன்று முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையை காரணமாக கூறியும், இன்னும் சில விஷயங்களை முன்வைத்தும் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த முறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என திமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஜாமீன் மனு நிராகரிப்பு: இந்நிலையில், இந்த அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வந்தது. இந்த சூழலில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி அமைச்சராகவும், செல்வாக்கு மிக்கரவாகவும் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அவர் எளிதில் கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையும் பாருங்க : கல்லூரி பெண்களை கவனம் ஈர்த்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உரை! இனி பா.ஜ.கதான்

இதுதான் அந்த காரணம் : செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் இன்னும் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, சிறையில் செந்தில் பாலாஜி தனது செல்வாக்கை பயன்படுத்தி பல வசதிகளை பெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வாதங்களை கருத்தில்கொண்டு தான் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி நிராகரித்தார்.

செந்தில் பாலாஜி தம்பியால் இந்த முறை ஜாமீன் நிராகரிக்கப்டடத்தை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என ஆர்.எஸ்.பாரதி ஏன் முதல்வரே நம்பியிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி ஆஜராகாத வாதத்தை அமலக்கத்துறையினர் முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

இனி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. தம்பி அமலக்கத்துறையிடம் சரணடைந்தால் தான் ஜாமீன் பற்றியே செந்தில் பாலாஜி பேச முடியும்.அப்படியே அவறது தம்பி ஆஜரானால் பல முக்கிய தகவல்கள் அமலாக்கத்துறைக்கு கிடைக்கும். பல திமுக புள்ளிகள் சிக்கும் என்பதால் செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்..

Exit mobile version