மூன்று மண்டலங்களாக பிரியும் இந்தியா ! கொரோன பாதித்த இடங்கள் வைத்து பிரிக்க யோசனை !

உலகத்தை புரட்டி போட்டுள்ளது கொரோனா இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 7,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 250 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் முக்கியமான மாநிலங்களான மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, 21 நாள் ஊரடங்கை பிரமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு, வரும் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா எனும் கொடிய உயிர் கொல்லி நோயின் பாதிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மருத்துவக்குழுக்கள் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிற்கு சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியா பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டம் இது. 21 நாட்கள் முடங்கிய இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என்ற கேள்வி உலக நாடுகள் உற்று கவனிக்கிறது. பல மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது இந்த நிலையில் இந்தியாவை சிகப்பு மண்டலம், மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலம் என 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அதிக உயிரிழப்புகள் உள்ள பகுதிகளை சிகப்பு மண்டலங்களாகவும், பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு உள்ள பகுதிகளை மஞ்சள் மண்டலமாகவும் , கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளை பச்சை மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதிகளில் ஊரடங்கு தொடர வேண்டும். மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தும் பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிப்பது, மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. பச்சை மண்டலமாக பிரிக்கப்படும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். இந்தியாவில் ஏறத்தாழ 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இங்கு பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது

Exit mobile version