வீட்டில் பெரியவர்கள் உள்ளார்களா ரெடியாக சொல்லுங்க! சீரடிக்கு சிறப்பு ரயில் ஏழு நாட்கள் ஆன்மீக சுற்றுலா!நம்ம பட்ஜெட்டில்!

தமிழகத்தில் பெரும்பாலும் பெரியவர்கள் ஷீரடிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். மேலும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போது ஷிரடிக்கு செல்வோம் என காத்திருக்கிறார்கள். குடும்ப பட்ஜெட்க்குள் பயணம் இருக்க வேண்டும் என்று ஆன்மீக பயணத்தை தள்ளி வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுதான் குரு க்ருபா யாத்திரை. இந்த ஆன்மிக யாத்திரை ஏழு நாட்கள் கொண்டது ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கா, சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில்களுக்கு செல்லலாம். இதுற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து டிச1ம் தேதி கிளம்புகிறது

திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை – எழும்பூர் வழியாக மஹாராஷ்டிரா மாநிலம் செல்லும். ஏழு நாட்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 7,060 ரூபாய் கட்டணம் மட்டுமே. மேலும் கொரோனா பாதிப்பின்றி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு, யாத்திரை ரயில் இயக்கப்படுவதால், பயணியர் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

Exit mobile version