திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-மதபோதகர் சாமுவேல் கைது!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைதூக்கியுள்ளது. சிறுமி தற்கொலை. பாலியல் வன்கொடுமைகள் என அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் சாமுவேல்பிரார்த்தனை செய்ய வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 35 வயதான சாமுவேல் வீரபாண்டி பகுதியில் தங்கி மத போதனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரிடம் பிரார்த்தனைக்காக வந்த 16 வயது சிறுமிக்குபாலியல் தொல்லை கொடுத்துள்ளார், இதனை தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மதபோதகர் சாமுவேல் மீது புகாரளித்திருக்கின்றனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரைப் பதிவு செய்த திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்தனர். கைது நடவடிக்கை பாயும் என பயந்த மதபோதகர் சாமுவேலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மதபோதகரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரி நேற்று முன்தினம் மதபோதகர் சாமுவேலை அதிரடியாக கைது செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாமுவேலை ஆஜர்படுத்திய ஆய்வாளர் சிவசங்கரி பின்னர் அவரை உடுமலை கிளை சிறையில் அடைத்திருக்கிறார்.

பாலியல் தாக்குதல்களிலிருந்து குழந்தைகளைக் காக்கவும், அப்படியான தாக்குதலைச் சந்தித்த குழந்தைகளை மீட்டு உரிய நீதியினை வழங்கவும் கடந்த 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மதபோதகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போக்ஸோ சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவர்க்கு தண்டனை வழங்க வேண்டும்.

Exit mobile version