டெல்லி கலவரம் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஷர்ஜீல் இமாம் கைது!

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற போது மிகப்பெரிய வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆதரவு எதிர்ப்பு என இரு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் பிரிவினைவாதிகள் புகுந்துவிட்டனர். காவல்துறையினர் மீது கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் பின் டெல்லி வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானர்கள்.கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தார்கள். கலவர பூமியாக மாறியது டெல்லி வடகிழக்கு பகுதி.

இந்த நிலையில் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பகுதியில் கலவரம் மூண்டது இதில் பலியானோரின் எண்ணிக்கை 40க்கும் மேற்பட்டோர் 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மீ கவுன்சிலர் தாஹிர் உசேன் கலவரத்துக்கு முக்கிய காரணம் நான் தான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான் அவன் மேலும் கூறுகையில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றியது ஆகியவற்றால் தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும். ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே கலவரம் ஏற்படுவதற்கு முக்கிய நோக்கம் என்று காவல்துறையில் தாஹிர் உசேன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளான்.

இந்த நிலையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனான ஷர்ஜீல் இமாம் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவன் ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஆவான். இமாம் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பேசிய சர்ச்சைக்குரிய விடீயோ வெளியானது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து ஷர்ஜூல் இமாம் மீது டெல்லி, அசாம்,அருணாச்சலப்பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பீகாரில் பதுங்கி இருந்த இமாமை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குணமானதையடுத்து சிஏஏ வன்முறை தொடர்பாக ஷர்ஜீலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவனிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஷர்ஜீலை காவல் துறை ஆஜர்படுத்தினர்.டெல்லி வன்முறை தொடர்பாக ஷர்ஜீல் இமாம் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version