21 நாள்அடங்கி இரு ! அத்துமீறாதே ! மீறினால் துப்பாக்கி சூடு தான் முதல்வர் அதிரடி !

உலகை ஆட்டி படைத்தது வரும் கொரோனவா வைரஸ் பரவலை இந்தியாவில் பரவவிடாமல் தடுக்கவும் முழுமையாக கட்டுப்படுத்தவும்இந்தியா முழுவதும் நேற்று இரவு 12 மணியிலிருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு அறிவித்தார் .

நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இதனையடுத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக ஒரு அறிவிப்பையும் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஊரடங்கு குறித்து அவர் கூறுகையில் “நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதன் தீவிரம் புரியாமல் பலர் வழக்கம்போல் சாலையில் நடமாடுவதாகவும், சிலர் வாகனங்களில் செல்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதை பார்த்துக் கொண்டு சும்மாக இருக்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் கூறியுள்ளேன். அவசியமானால் ராணுவத்தை அழைத்து கட்டுப்பாட்டை மதிக்காதவர்களை சுட்டுத்தள்ளவும் தயாராக உள்ளதாக” அதிரடியக கூறியுள்ளார்.

Exit mobile version