கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மீது, தொற்று நோய் குறித்த உத்தரவுகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டியதாக போலீசார் வழக்குப் பதிவு!!
பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது மார்ச்-20 ஆம் தேதி இரவு தொற்றுநோய் சட்டம் 188, 269, 270 பிரிவுகளின் கீழ் உத்திர பிரதேச அரசு FIR பதிவு செய்யப்பட்டது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசு இல்லத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய ஆலோசனையின் படி பாலிவுட் பாடகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாலிவுட் பாடகி கனிகா கபூர் இரு தினங்களுக்கு முன் லண்டனிலிருந்து இந்தியா திரும்பியபோது விமான நிலைய பரிசோதனையில் கொரோனாவைரஸ் அவளுக்கு தாக்கம் இல்லாததால், தாமே முன் வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டிருக்கிறாள்.ஆனால் இந்த பாலிவுட் பெண் அறுவுறுத்தலை அலட்சியம் செய்து பார்ட்டி கொடுத்திருக்கிறாள் லக்னோ தாஜ் ஹோட்டலில்.
கடந்த 15 ஆம் லண்டனில் இருந்து திரும்பிய அவர், லக்னோவில் ஐந்து நட்சத்திர விடுதியில் அவர் நடத்திய விருந்தில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, அவர் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வசுந்தராவும் துஷ்யந்தும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதையடுத்து லக்னோ நகர தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் பேரில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக லக்னோ நகர காவல் ஆணையர் சுஜித் பாண்டே தெரிவித்துள்ளார்.