“தமிழக மீனவர் தவறுதலாக எல்லை தாண்டி பிடிபடுவோரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” – அண்ணாமலை

நமது அண்டைநாடான இலங்கைக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பல முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

லங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களோ, இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்களோ சிறை செல்ல வேண்டும் என்பதற்காக எல்லை தாண்டுவதில்லை என்றும் தவறுதலாகத்தான் வருகிறார்கள் என்றும் கூறிய கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் தற்போதைய நிலை விரைவில் மாறும் என்றார். 

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version